திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 134

தொடர்ந்து படிக்கread this section continuously

புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

உரை

புரை ஊற்றப்படாத சுத்தமான பாலுக்குள்ளே நெய் கலந்திருப்பது போலவே, கடல் அலைகள் போல அலைபாய்ந்துகொண்டிருக்கும் சிந்தனைகளுக்குள்ளே ஞானகுரு சொன்ன மந்திரத்தை ஜெபித்து, இறைவன் மேல் மனம் ஒருநிலைப்பட்டிருப்பதை உணர்ந்தவர்கள், தாம் பிறந்த இவ்வுடலை விட்டுவிட்டு சூட்சும ஒளியாகி, எல்லையில்லாத பேரொளியாகிய இறைவனோடு கலந்து, சுத்தமான பரவெளியில் என்றுமே நிலைத்திருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    புரை ஊற்றப்படாத சுத்தமான பாலுக்குள்ளே நெய் கலந்திருப்பது போல...

  • வரி 2

    ...கடல் அலைகள் போல அலைபாய்ந்துகொண்டிருக்கும் சிந்தனைகளுக்குள்ளே ஞானகுரு சொன்ன மந்திரத்தை ஜெபிப்பவர்கள்.

  • வரி 3

    இறைவன் மேல் மனம் ஒருநிலைப்பட்டிருப்பதை உணர்ந்தவர்கள், தாம் பிறந்த இவ்வுடலை விட்டுவிடும்போது...

  • வரி 4

    ...சூட்சும ஒளியாகி, எல்லையில்லாத பேரொளியாகிய இறைவனோடு கலந்து, சுத்தமான பரவெளியில் என்றுமே நிலைத்திருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #134

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout