தொடர்ந்து படிக்கread this section continuously
அளித்தான் உலகெங்கும் தானான உண்மைஅளித்தான் அமரர் அறியா உலகம்அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே.
உரைmeaning
அண்டங்கள் அனைத்துமே சிவமாகவே இருக்கும் உண்மையையும், தேவர்களும் அமரர்களும் அறியாத பேரின்ப உலகையும், உயிர்கள் உய்வதற்கென்று தில்லை அம்பலத்தில் தாம் ஆடும் திருவடிகளையும், பேரின்பம் சூழ்ந்த அருள்வெளியாகிய பரவெளியையும், இறைவன் தன் பெருங்கருணையால் உயிர்களுக்கு அளித்து அருளினான்.
The truth that all worlds are Sivam itself, the world of supreme bliss unknown even to gods and immortals, his own holy feet that dance in the assembly hall at Thillai for the deliverance of souls, and the vast expanse of grace, surrounded by supreme bliss, God gave and granted to living beings, out of his great compassion.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அண்டங்கள் அனைத்துமே சிவமாகவே இருக்கும் உண்மையை இறைவன் அளித்தான்.
God gave the truth that all worlds are Sivam itself.
- வரி 2Line 2
தேவர்களும் அமரர்களும் அறியாத பேரின்ப உலகையும் அவனே அளித்தான்.
He also gave the world of supreme bliss, unknown even to gods and immortals.
- வரி 3Line 3
உயிர்கள் உய்வதற்கென்று தில்லை அம்பலத்தில் தாம் ஆடும் திருவடிகளையும் அளித்தான்.
He gave his own holy feet that dance in the assembly hall at Thillai, for the deliverance of souls.
- வரி 4Line 4
பேரின்பம் சூழ்ந்த அருள்வெளியாகிய பரவெளியையும் தன் பெருங்கருணையால் அளித்தான்.
And out of his great compassion, he gave the vast expanse of grace, surrounded by supreme bliss.
திருமந்திரம் பாடல் #123





