திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 141

தொடர்ந்து படிக்கread this section continuously

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினைசிந்திப் பதுநந்தி செய்ய திருமேனிவந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

உரை

குருவின் அருளால் தமது மலங்கள் அனைத்தும் நீங்கிச் சென்று சந்திக்க வேண்டியது இறைவனின் திருவடிகளே ஆகும். எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது இறைவனின் திருமேனியே ஆகும். உண்மையை மட்டுமே பேசுகின்ற வாயால் எப்போதும் வணங்கித் துதிக்க வேண்டியது இறைவனின் திருநாமமே ஆகும். நெஞ்சத்திலும் எண்ணத்திலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது குருநாதர் கூறிய பொன்னான போதனைகளே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    குருவின் அருளால் தமது மலங்கள் அனைத்தும் நீங்கிச் சென்று சந்திக்க வேண்டியது இறைவனின் திருவடிகளே ஆகும்.

  • வரி 2

    எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது இறைவனின் திருமேனியே ஆகும்.

  • வரி 3

    உண்மையை மட்டுமே பேசுகின்ற வாயால் எப்போதும் வணங்கித் துதிக்க வேண்டியது இறைவனின் திருநாமமே ஆகும்.

  • வரி 4

    நெஞ்சத்திலும் எண்ணத்திலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது குருநாதர் கூறிய பொன்னான போதனைகளே ஆகும்.

திருமந்திரம் பாடல் #141

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout