தொடர்ந்து படிக்கread this section continuously
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்திதாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்தோயமது வாய்எழும் சூரிய னாமே.
உரைmeaning
காய்ந்த மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசும்போது அவற்றின் உள்ளிருந்தே தோன்றும் நெருப்பைப் போல, உயிர்களின் உடலாகிய கோயிலுக்குள் குடிகொண்டு வீற்றிருக்கும் உயிர்களின் தலைவன் குருநாதன் இறைவன். அவன் உலகத் தாயை விடவும் உயிர்கள் மேல் மிகுந்த கருணை கொண்டவன். அவ்வுயிர்களைப் பற்றியிருக்கும் மும்மலங்களாகிய அழுக்குகளை அகற்ற வேண்டி, இருளை விலக்கக் கடலின் மேல் தோன்றும் சூரியனைப் போல, மும்மல இருளை அகற்றும் பேரொளியாகத் தன் கருணை என்னும் மாபெரும் கடலின் மேல் தோன்றும் சூரியனாக இருக்கின்றான்.
Like the fire that rises from within when dried bamboos rub against one another, God, the lord of souls, dwells enthroned within the temple that is the body of every living being, as its guru. He holds more compassion for souls than even a worldly mother. And to remove the impurities, the dirt of the three impurities that cling to souls, he rises, as the sun rises over the sea to drive away darkness, as the sun over the great sea of his own compassion, the supreme light that dispels the darkness of the three impurities.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
காய்ந்த மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசும்போது அவற்றின் உள்ளிருந்தே தோன்றும் நெருப்பைப் போல, இந்த உடலாகிய கோயிலுக்குள்...
Like the fire that rises from within when dried bamboos rub against one another, within this body, the temple...
- வரி 2Line 2
...குடிகொண்டு வீற்றிருக்கும் உயிர்களின் தலைவன் குருநாதன் இறைவன்.
...God, the lord of souls, dwells enthroned as its guru.
- வரி 3Line 3
அவன் உலகத் தாயை விடவும் உயிர்கள் மேல் மிகுந்த கருணை கொண்டு, மும்மலங்களாகிய அழுக்குகளை மாற்றி அகற்றுகின்றான்.
He holds more compassion for souls than even a worldly mother, and so transforms and removes the three impurities that cling to them.
- வரி 4Line 4
இருளை விலக்கக் கடலின் மேல் தோன்றும் சூரியனைப் போல, தன் கருணை என்னும் மாபெரும் கடலின் மேல் தோன்றும் சூரியனாக இருக்கின்றான் இறைவன்.
Like the sun that rises over the sea to drive away darkness, God rises as the sun over the great sea of his own compassion.
திருமந்திரம் பாடல் #116





