தொடர்ந்து படிக்கread this section continuously
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்தீமேவு பல்கர ணங்களுள் உற்றனதாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.
உரைmeaning
பசுவின் பாலில் கலந்திருக்கும் நீரை அகற்றி வெறும் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல, உயிர்கள் தினமும் தங்கள் பலவித காரணங்களால் சேர்த்துக்கொள்ளும் தீவினைகளாகிய அழுக்கை சுத்தமான அவர்கள் ஆன்மாவிலிருந்து அகற்றி, அந்தத் தீவினைகளால் அவர்கள் எடுக்கும் ஏழுவித பிறப்புகளுக்கு வித்தாகிய வினைகளை எரித்து, உயிர்களைத் தம்பால் ஈர்த்துக்கொள்ளவே தில்லை அம்பலத்தில் இறைவன் எப்போதும் தனியாகத் திருநடனம் புரிகின்றான்.
Like the swan that separates the water mixed into milk and drinks only the pure milk, God removes the dirt of the evil deeds that living beings gather daily for their many reasons, from the pure soul beneath them, and burns away the karmas that are the seed of the seven kinds of birth those evil deeds bring about, so as to draw souls to himself. It is for this that God, in the assembly hall at Thillai, forever performs his sacred dance alone.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பசுவின் பாலில் கலந்திருக்கும் நீரை அகற்றி வெறும் பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல...
Like the swan that separates the water mixed into milk and drinks only the pure milk...
- வரி 2Line 2
...உயிர்கள் தினமும் தங்கள் பலவித காரணங்களால் சேர்த்துக்கொள்ளும் தீவினைகளாகிய அழுக்கை சுத்தமான அவர்கள் ஆன்மாவிலிருந்து அகற்றி, அது எப்போதும் நிகழும் நித்தியச் செயலாக இருக்கின்றது.
...God removes the dirt of the evil deeds that living beings gather daily for their many reasons, from the pure soul beneath them, and this is his own unceasing, eternal act.
- வரி 3Line 3
அந்தத் தீவினைகளால் அவர்கள் எடுக்கும் ஏழுவித பிறப்புகளுக்கு வித்தாகிய வினைகளை எரித்து...
He burns away the karmas that are the seed of the seven kinds of birth those evil deeds bring about...
- வரி 4Line 4
...உயிர்களைத் தம்பால் ஈர்த்துக்கொள்ளவே தில்லை அம்பலத்தில் இறைவன் எப்போதும் தனியாகத் திருநடனம் புரிகின்றான்.
...and so, to draw souls to himself, God, in the assembly hall at Thillai, forever performs his sacred dance alone.
திருமந்திரம் பாடல் #120





