திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 121

தொடர்ந்து படிக்கread this section continuously

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்சுத்தத் துரியம் பிறந்து துடக்கறஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடுசெத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

உரை

உயிர்கள் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் வினைகளை அழித்தருள குருநாதராக வந்த இறைவன் உபதேசித்த பேரறிவு ஞானம் மிகவும் வாய்க்கப்பெற்று, அந்தப் பேரறிவு ஞானத்தின் மூலம் மல மாசு இல்லாத சுத்தமான ஆன்மாவாகப் பிறந்து, உலகப் பற்றுக்களை உதறிவிட்டு, ஐம்புலன்களைக் கொண்ட உயிரும் உடலும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போதே இறந்துபோன உடலைப் போல அசைவற்று, எப்போதும் இறைவனின் நினைப்பிலேயே இருப்பவர்கள் சிவயோகியர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக இருக்கும் வினைகளை அழித்தருள குருநாதராக வந்த இறைவன் உபதேசித்த பேரறிவு ஞானம் மிகவும் வாய்க்கப்பெற்றவர்கள்.

  • வரி 2

    அந்தப் பேரறிவு ஞானத்தின் மூலம் மல மாசு இல்லாத சுத்தமான ஆன்மாவாகப் பிறந்து, உலகப் பற்றுக்களை உதறிவிடுவார்கள்.

  • வரி 3

    ஐம்புலன்களைக் கொண்ட உயிரும் உடலும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போதே...

  • வரி 4

    ...இறந்துபோன உடலைப் போல அசைவற்று, எப்போதும் இறைவனின் நினைப்பிலேயே இருப்பவர்கள் சிவயோகியர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #121

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout