தொடர்ந்து படிக்கread this section continuously
அடங்குபே ரண்டத் தனுஅண்டம் சென்றங்கிடங்கொண்ட தில்லை ஈதன்றி வேறுண்டோகடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்திடம்பெற நின்றான் திருவடி தானே.
உரைmeaning
அண்டங்கள் அனைத்துமே அனுக்களாகவே இருப்பதால், அவை அனுவுக்குள் அடங்குபவை. ஆனால் அனுவானது அண்டங்களுக்குள் அடங்கும் ஒரு பொருள் அல்ல; அது அண்டங்கள் முழுவதற்கும் மூலப் பொருள். அதுபோலவே, உடம்பெடுத்து வந்த உயிர்கள் அனைத்துமே ஆன்மாவால் உருவானவை என்பதால், ஆன்மா உடலுக்குள் அடங்கும் ஒரு பொருள் அல்ல; அது உடம்பின் உருவத்திலேயே இருக்கும் இறைவனின் ஒரு பகுதி. ஆகவே உடல் முடிந்தபின் உயிர் சென்று சேரும் இடம் எது என்று பார்த்தால், அது எந்தப் பரமாத்மாவிலிருந்து வந்ததோ, அந்தப் பேரான்மாவாக நின்றுகொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளில்தான்.
Since all worlds exist as atoms, they are contained within the atom. But the atom is not a thing contained within the worlds; it is the source substance of all the worlds. In the same way, since every soul that has taken a body is formed by the soul, the soul is not a thing contained within the body; it is a part of God present in the very form of the body. So, if one looks for the place the soul goes to after the body ends, that place is nowhere but the holy feet of God, who stands as the same supreme soul from which it came.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அண்டங்கள் அனைத்துமே அனுக்களாகவே இருப்பதால், அவை அனுவுக்குள் அடங்குபவை.
Since all worlds exist as atoms, they are contained within the atom.
- வரி 2Line 2
ஆனால் அனுவானது அண்டங்களுக்குள் அடங்கும் ஒரு பொருள் அல்ல; அது அண்டங்கள் முழுவதற்கும் மூலப் பொருள்.
But the atom is not a thing contained within the worlds; it is the source substance of all the worlds.
- வரி 3Line 3
அதுபோலவே, உடம்பெடுத்து வந்த உயிர்கள் அனைத்துமே ஆன்மாவால் உருவானவை என்பதால், ஆன்மா உடலுக்குள் அடங்கும் ஒரு பொருள் அல்ல; அது உடம்பின் உருவத்திலேயே இருக்கும் இறைவனின் ஒரு பகுதி.
In the same way, since every soul that has taken a body is formed by the soul, the soul is not a thing contained within the body; it is a part of God present in the very form of the body.
- வரி 4Line 4
ஆகவே உடல் முடிந்தபின் உயிர் சென்று சேரும் இடம் எது என்று பார்த்தால், அது எந்தப் பரமாத்மாவிலிருந்து வந்ததோ, அந்தப் பேரான்மாவாக நின்றுகொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளில்தான்.
So, if one looks for the place the soul goes to after the body ends, that place is nowhere but the holy feet of God, who stands as the same supreme soul from which it came.
திருமந்திரம் பாடல் #137





