தொடர்ந்து படிக்கread this section continuously
அப்பினிற் கூர்மை ஆதித்தனின் வெம்மையால்உப்பெனப் பேர்பெற் றருச்செய்த அவ்வுருஅப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
உரைmeaning
கடல்நீரில் கரிப்பாகக் கலந்திருக்கும் உப்புச்சத்தே சூரியனின் வெப்பத்தால் ஒன்றுகூடி, உப்பு எனும் பெயர்பெற்ற பொருளாக உருவம் பெறும். அவ்வாறு உருவம் பெற்ற உப்பை மறுபடியும் கடல்நீரில் கலந்தால், அதன் உருவம் மறைந்து, மறுபடியும் கரிப்புச் சத்தாகவே மாறிக் கடலோடு ஒன்றாகக் கலந்துவிடும். அதுபோலவே, பேரான்மாவான சிவத்திடமிருந்து பிரிந்துவந்த ஆன்மாவும், இறுதியில் சிவமாகிய அப்பேரான்மாவில் ஒன்றாகக் கலந்து அடங்கிவிடும்.
The salt dissolved as brine within seawater gathers together through the sun's heat and takes shape as a thing that comes to be called salt. If that salt, once formed, is mixed again into seawater, its shape disappears, and it turns back into brine and merges as one with the sea again. In the same way, the soul that had separated from Sivam, the supreme soul, will in the end merge and settle as one within that same Sivam, the supreme soul.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கடல்நீரில் கரிப்பாகக் கலந்திருக்கும் உப்புச்சத்தே சூரியனின் வெப்பத்தால் ஒன்றுகூடும்.
The salt dissolved as brine within seawater gathers together through the sun's heat.
- வரி 2Line 2
அவ்வாறு ஒன்றுகூடி உப்பு எனும் பெயர்பெற்ற பொருளாக உருவம் பெறும்.
Gathering together like this, it takes shape as a thing that comes to be called salt.
- வரி 3Line 3
அவ்வாறு உருவம்பெற்ற உப்பை மறுபடியும் கடல்நீரில் கலந்தால், அதன் உருவம் மறைந்து மறுபடியும் கரிப்புச் சத்தாகவே மாறிக் கடலோடு ஒன்றாகக் கலந்துவிடும்.
If that salt, once formed, is mixed again into seawater, its shape disappears, and it turns back into brine and merges as one with the sea again.
- வரி 4Line 4
அதுபோலவே, பேரான்மாவான சிவத்திடமிருந்து பிரிந்துவந்த ஆன்மாவும், இறுதியில் சிவமாகிய அப்பேரான்மாவில் ஒன்றாகக் கலந்து அடங்கிவிடும்.
In the same way, the soul that had separated from Sivam, the supreme soul, will in the end merge and settle as one within that same Sivam, the supreme soul.
திருமந்திரம் பாடல் #136





