காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம்காணும் அளவும் கருத்தறி வாரில்லைபேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்குமாணிக்க மாலை மனம்புகுந் தானே.
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமிஇருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ளவருந்தன்மை யாளனை வானவர் தேவர்தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே.
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்திசமையநிர் வாணம் கலாசுத்தி யாகும்அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே.
ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லதுஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டாஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே.
ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப்போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும்ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல்போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்வானுற மாமலர் இட்டு வணங்கினும்ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லதுதேனமர் புங்குழல் சேரஒண் ணாதே.
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனைஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்சேவடி சேரல் செயலறல் தானே.
உச்சியும் காலையும் மாலையும் ஈசனைநச்சுமின் நச்சி நமவென்று நாமத்தைவிச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும்நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.
புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம்பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம்எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால்பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே.
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடைவந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடைவந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.
இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர்விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தேசிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டுநந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
மனபவ னங்களை மூலத்தான் மாற்றிஅனித உடல்பூத மாக்கி அகற்றிப்புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத்தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.
பகலும் இரவும் பயில்கின்ற பூசைஇயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப்பகலும் இரவும் பயிலாத பூசைசகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.
இராப்பகல் அற்ற இடத்தே இருந்துபராக்குஅற ஆனந்தத் தேறல் பருகிஇராப்பகல் அற்ற இறையடி இன்பத்துஇராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே.
படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகாநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்துஉண்டது மூன்று புவனமும் உண்டதுகொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்றுஎண்திசை நந்தி எடுத்துரைத் தானே.
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறைஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானதுமூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என்பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்குநிகரில்லை என்பது நிச்சயம் தானே.
ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலைபேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்றுநீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள்ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்றுவேறுஅணி வார்க்கு வினையில்லை தானே.
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்டபேர்நந்தி என்னும் பிறங்கு சடையனைநான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப்பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே.
அழிதகவு இல்லா அரன்அடி யாரைத்தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும்பழுது படாவண்ணம் பண்பனை நாடித்தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே.
பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப்புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழிஅகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும்ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே.
திகைக்குரி யானொரு தேவனை நாடும்வகைக்குரி யானொரு வாது இருக்கில்பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும்அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்அவ்வுல கத்தே அரனடி கூடுவர்அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.
கொண்ட குறியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள்உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே.
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும்கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே.
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள்உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக்கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும்அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்புயங்களும் எண்டிசை போதுபா தாளமயங்காப் பகிரண்ட மாமுடி தானே.
அகம்படி கின்றநம் ஐயனை ஒரும்அகம்படி கண்டவர் அல்லலில் சேரார்அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம்அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே.
கழிவும் முதலும் காதல் துணையும்அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப்பழியும் புகழும் படுபொருள் முற்றும்ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே
என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும்அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே.
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும்அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே.
தலைமிசை வானவர் தாழ்சடை நந்திமிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும்பலமிசை செய்யும் படர்சடை யோனே.
அறியாப் பருவத்து அரன்அடி யாரைக்குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமைகுறியார் சடைமுடி கட்டி நடப்பார்மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே.
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்அவன்பால் அணுகியே நாடும் அடியார்இவன்பால் பெருமை இலயமது ஆமே.
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள்எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்துஎண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப்பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே.
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன்மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன்மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள்மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே.
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்குகட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர்ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.
அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர்உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப்பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்துஇச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.
விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டுஉச்சிக்கு முன்னே உழவு சமைந்ததுஅச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார்இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில்பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப்பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப்பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே.
பரந்துலகு ஏழும் படைத்த பிரானைஇரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்நிரந்தக மாக நினையும் அடியார்இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்பொரஇருந் தான்புக லேபுக லாகவரஇருந் தால்அறி யான்என்ப தாமே.
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப்பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்ஐயம் புகாமல் இருந்த தவசியார்வையகம் எல்லாம் வரஇருந்தாரே.
நாலேழு மாறவே நண்ணிய முத்திரைபாலான மோன மொழியில் பதிவித்துமேலான நந்தி திருவடி மீதுய்யக்கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே
மூலப்பாடல் மட்டும் · original verses only



