உள்ளம் பெருங்கோயி லூனுடம் பாலையம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்தெள்ளித் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்கள்ளப் புலனைந்துங் காளா விளக்கே.
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்காட்டவிரு மலங் காலையு மாலையுமூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்பாட்டவி காட்டுறு பாலனு மாமே.
பான்மொழி பாகன் பராபரன் றானாகுமானசதா சிவன் றன்னை யாவாகித்துமேன்முக மீசான மாகவே கைக்கொண்டுசீன்முகஞ் செய்யச் சிவனவ னாகுமே.
நினைவது வாய்மை மொழிவது மல்லாற்கனைகழ லீசனைக் காண வரிதாங்கனைகழ லீசனைக் காண்குற வல்லார்புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லாரே.
மஞ்சன மாலை நிலாவிய வானவர்நெஞ்சினு ளீசனிலை பெறு காரணமஞ்சமு தாமுப சாரமெட் டெட்டோடுமஞ்சலி யோடுங் கலந்தற்சித் தார்களே.
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுள நீருளவண்ணலது கண்டருள் புரியா நிற்குமெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனைநண்ணியறி யாமல் நழுவுகின் றாரே.
அத்த னவதீர்த்த மாடும் பரிசுகேளொத்த மெஞ்ஞானத் துயர்ந்தவர் பாதத்தைச்சுத்தம தாக விளக்கித் தெளிக்கவேமுத்தி யாமென்று நம்மூலன் மொழிந்ததே.
மறப்புறுத் திவ்வழி மண்ணில் நின்றாலுஞ்சிறப்போடு பூநீர் திருந்த முன்னேந்திமறப்பின்றி யுன்னை வழிப்படும் வண்ணமறப்பற வேண்டு மமரர் பிரானே.
ஆரா தனையு மமரர் குழாங்களுநதீராக் கடலு நிலத்து மதாய்நிற்கும்பேரா யிரமும் பிரான் றிருநாமமேயாரா வழியெங்க ளாதிப் பிரானே.
ஆனைந்து மாட்டி யமரர் குழாந்தொழத்தானந்த மில்லாத் தலைவ னருளதுதேனுந்து மாமல ருள்ளே தெளிந்ததோர்பாரைந்து குணமும் படைத்துநின் றானே.
உழைக்கொண்ட பூநீ ரொருங்குட னேந்திமழைக்கொண்ட மாமுகில் மேற்சென்ற வானோர்தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப்பிழைப்பின்றி யெம்பெரு மானரு ளாமே.
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்குவுள்ளக் கடல்புக்கு வோர்தம்மைப் பூக்கொண்டுகள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதாரள்ளற் கடலு ளழுந்துகின் றாரே.
கழிப்படு தண்கடல் கௌவை யுடைத்துவழிப்படு வார்மலர் மட்டறி வார்கள்பழிப்படு வார்பலரும் பழி வீழவெளிப்படு வாருச்சி மேவிநின் றானே.
பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்பயனறி வார்க்கரன் றானே பயிலும்நயனங்கள் மூன்றுடை யானடி சேரவயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்றார்த்தெம தீசனருட் சேவடி யென்றன்மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்றதீர்த்தனை யாருந் திதித்துண ராரே.
தேவர்க ளோடிசை வந்துமண் ணாடோறும்பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனைமூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
உழைக்கு முன்னே நெடுநீர் மலரேந்திப்பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணியிழைக்கொண்ட பாதத் தினமலர் தூவிமழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
வென்று விரைந்து விரைபணி யென்றனர்நின்று பொருந்த யிறைப்பணி நேர்படத்துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்கொன்றிடு நித்தலுங் கூறிய தன்றே.
சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியுமாத்தியை நாளு மிறையை யறிகிலாராத்தி மலாகிட்டதற் கழுக்கற்றக் கால்மாத்திக்கே செல்லும் வழியது வாமே.
ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புறமேவித் திரியும் விரிசடை நந்தியைக்கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைதாவிக்கு மந்திரந் தாமறி யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1823
1 / 20




