திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1824

தொடர்ந்து படிக்கread this section continuously

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்காட்டவிரு மலங் காலையு மாலையுமூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்பாட்டவி காட்டுறு பாலனு மாமே.

உரை

அடியவர்கள் தாம் செய்கின்ற யாகத்தில் விருப்பத்தோடு அளிக்கின்ற யாகப் பொருட்களைப் பிரசாதமாக ஏற்கின்ற, விரிந்த சடையைக் கொண்ட குருநாதனாகிய இறைவனுக்கு நாம் வளர்த்துச் சமர்ப்பிக்கின்ற யாக அக்னியானது, நமக்குள் இருக்கின்ற மலங்கள் நீங்க வேண்டி, காலையில் சூரியன் தோன்றும் போதும் மாலையில் சூரியன் மறையும் போதும் நாம் செய்கின்ற யாகமாக இருக்க வேண்டும். புகையை ஊட்டுகின்ற யாகப் பொருட்களினுடைய நெருப்பு இறைவனுடைய உள்ளத்தைக் குளிர்விக்கும். மந்திரங்களை ஓதி, யாகத்தில் பொருட்களை இட்டு, அக்னியை வளர்த்துக் காட்டும் போது, அந்த அக்னியில் ஜோதியாக வீற்றிருப்பவன் நம்மை ஆட்கொண்டு காத்து அருள்கின்ற இறைவனே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அடியவர்கள் தாம் செய்கின்ற யாகத்தில் விருப்பத்தோடு அளிக்கின்ற யாகப் பொருட்களை, விரிந்த சடையைக் கொண்ட குருநாதனாகிய இறைவன் பிரசாதமாக ஏற்கின்றான்.

  • வரி 2

    அவனுக்கு நாம் வளர்த்துச் சமர்ப்பிக்கின்ற யாக அக்னி, நமக்குள் இருக்கின்ற மலங்கள் நீங்க வேண்டி, காலையில் சூரியன் தோன்றும் போதும் மாலையில் சூரியன் மறையும் போதும் நாம் செய்கின்ற யாகமாக இருக்க வேண்டும்.

  • வரி 3

    புகையை ஊட்டுகின்ற யாகப் பொருட்களினுடைய நெருப்பு இறைவனுடைய உள்ளத்தைக் குளிர்விக்கும்.

  • வரி 4

    மந்திரங்களை ஓதி, யாகத்தில் பொருட்களை இட்டு, அக்னியை வளர்த்துக் காட்டும் போது, அந்த அக்னியில் ஜோதியாக வீற்றிருப்பவன் நம்மை ஆட்கொண்டு காத்து அருள்கின்ற இறைவனே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1824

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout