திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1825

தொடர்ந்து படிக்கread this section continuously

பான்மொழி பாகன் பராபரன் றானாகுமானசதா சிவன் றன்னை யாவாகித்துமேன்முக மீசான மாகவே கைக்கொண்டுசீன்முகஞ் செய்யச் சிவனவ னாகுமே.

உரை

இறைவனை அடைய வேண்டும் என்ற உண்மையான தேடுதலோடு முயற்சி செய்கின்ற அடியவர்களுக்கு, அவரவருடைய கர்ம நிலைகள் நீங்கி இறைவனை அடைகின்ற பக்குவம் கிடைக்கும் வண்ணம் அருள் புரிகின்ற இறைவியைத் தமது சரிபாதிப் பாகமாகக் கொண்டு, அடியவர்களுக்கு அருளும் தொழிலைப் புரிகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவன். அந்த இறைவனை முதலில் அருவுருவமாக வழிபடுவதற்கு, ஆகம விதிகளின்படி முறையாக இலிங்க வடிவத்தைச் செய்து, அதில் எழுந்தருளும்படி இறைவனை உண்மையான அன்போடு வேண்டி வரவழைக்க வேண்டும். அதன் பிறகு தாம் செய்கின்ற இலிங்க வழிபாட்டை முறைப்படி சரியாகக் கடைபிடித்து, அதன் பயனால் இலிங்கத்தில் எழுந்தருளிய இறைவனைத் தமக்குள்ளும் எழுந்தருளும்படி செய்து, அதையே தலையாகப் பற்றிக் கொண்ட அடியவர்கள் சிவமாகவே ஆகிவிடுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அடியவர்களின் தகுதிக்கு ஏற்ப அருள் பாலிக்கும் இறைவியைத் தமது ஒரு பாகமாகக் கொண்டவனே பரம்பொருள்; அவன் தானாகவே அனைத்திற்கும் மேலான பரனாக இருக்கின்றான்.

  • வரி 2

    இறைவியும் இறைவனும் சேர்ந்து அருளுகின்ற சதாசிவமூர்த்தியை, ஆகம விதிகளின்படி முறையாகச் செய்த இலிங்க வடிவத்தில் எழுந்தருளும்படி உண்மையான அன்போடு வேண்டி வரவழைக்க வேண்டும்.

  • வரி 3

    அவ்வாறு இலிங்கத்தில் எழுந்தருளிய இறைவனைத் தமக்குள்ளும் எழுந்தருளும்படி செய்து, அந்த நிலையையே அனைத்திற்கும் தலையாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

  • வரி 4

    சாதகத்தின் ஒழுக்கத்தைச் சரியாகக் கடைபிடித்து இவ்வாறு வழிபடுகின்ற அடியவர்கள் சிவமாகவே ஆகிவிடுவார்கள்.

திருமந்திரம் பாடல் #1825

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout