திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1839

தொடர்ந்து படிக்கread this section continuously

உழைக்கு முன்னே நெடுநீர் மலரேந்திப்பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணியிழைக்கொண்ட பாதத் தினமலர் தூவிமழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

உரை

காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழிலைச் செய்வதற்கு முன்பு, அவசரமின்றி நிதானமாகத் தூய்மையான நீரையும் நறுமணமிக்க மலர்களையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, எந்தவிதக் குற்றமும் இல்லாமல் இறைவனைச் சிரத்தையோடு பூசை செய்கின்ற மிகப்பெரும் தவத்தை ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து, அழகிய சிலம்புகளை அணிந்திருக்கின்ற இறைவனின் திருவடிகளுக்கு ஒரே வகையான நறுமலர்களைத் தூவி அருச்சனை செய்து, மழை பொழிகின்ற கருத்த மேகத்தைப் போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து நிலையாக நில்லுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழிலைச் செய்வதற்கு முன்பு, அவசரமின்றி நிதானமாகத் தூய்மையான நீரையும் நறுமணமிக்க மலர்களையும் இரு கைகளில் ஏந்திக் கொள்ளுங்கள்.

  • வரி 2

    எந்தவிதக் குற்றமும் இல்லாமல் இறைவனைச் சிரத்தையோடு பூசை செய்கின்ற மிகப்பெரும் தவத்தை ஒரு நாளும் தவறாமல் கடைபிடியுங்கள்.

  • வரி 3

    அழகிய சிலம்புகளை அணிந்திருக்கின்ற இறைவனின் திருவடிகளுக்கு ஒரே வகையான நறுமலர்களைத் தூவி அருச்சனை செய்யுங்கள்.

  • வரி 4

    மழை பொழிகின்ற கருத்த மேகத்தைப் போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து நிலையாக நில்லுங்கள்.

திருமந்திரம் பாடல் #1839

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout