தொடர்ந்து படிக்கread this section continuously
வென்று விரைந்து விரைபணி யென்றனர்நின்று பொருந்த யிறைப்பணி நேர்படத்துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்கொன்றிடு நித்தலுங் கூறிய தன்றே.
உரைmeaning
ஐந்து புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் சிக்கிச் சுழலாமல், அவற்றை மன உறுதியால் வென்று, மனித வாழ்க்கையில் உடனடியாகச் செய்ய வேண்டியது இறைவனுக்குத் தூப தீபங்கள் காட்டி வழிபடுவதே என்று சான்றோர்கள் சொல்லுவார்கள். அவர்கள் சொல்லியபடி, இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து, இறைவனோடு தம் மனமும் பொருந்தி இருக்கும்படி நின்று, தூய்மையான நீரால் அபிஷேகம் செய்தும், காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களால் அருச்சனை செய்தும், தினந்தோறும் இறைவனைத் தொழுது வந்தால், இறைவனுடைய திருவருளானது அடியவர்களின் வினைகளை அழித்து நீக்கிவிடும். இதை முன் காலத்திலேயே சான்றோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
The wise would say that what a human life must do at once, rather than be caught and spun about in the desires that run out through the five senses, is to conquer those desires by firmness of mind and to worship the Lord with incense and lamp. As they said, if one forgets oneself in devotion to the Lord, stands with one's own mind joined to him, performs the abhisheka with pure water, makes the archana with fragrant flowers still wearing the morning dew, and bows to the Lord day after day, then the sacred grace of the Lord destroys and removes the deeds of the devotees. This the wise said long ago.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஐந்து புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் சிக்கிச் சுழலாமல் அவற்றை மன உறுதியால் வென்று, உடனடியாகச் செய்ய வேண்டியது இறைவனுக்குத் தூப தீபங்கள் காட்டி வழிபடுவதே என்று சான்றோர்கள் சொன்னார்கள்.
The wise said that instead of being caught and spun about in the desires that run out through the five senses, one should conquer them by firmness of mind, and that what must be done at once is to worship the Lord with incense and lamp.
- வரி 2Line 2
இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து நின்று, தம் மனம் இறைவனோடு பொருந்தி இருக்கும்படி அவனுக்கான பூஜைகள் சிறிதும் தவறாமல் நிகழ வேண்டும்.
Forgetting oneself in devotion to the Lord, one should stand with one's mind joined to him, so that the worship offered to him goes on without the least lapse.
- வரி 3Line 3
இறைவனோடு பொருந்தி நின்று, தூய்மையான நீரால் அபிஷேகம் செய்தும், காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களால் அருச்சனை செய்தும் தொழுது வந்தால்,
Standing so joined to him, if one performs the abhisheka with pure water and makes the archana with fragrant flowers still wearing the morning dew, and bows before him,
- வரி 4Line 4
இறையருளானது தினந்தோறும் அடியவர்களின் வினைகளை அழித்து நீக்கிவிடும் என்று முன் காலத்திலேயே சான்றோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
then day after day the Lord's grace destroys and removes the deeds of the devotees; this the wise said long ago.
திருமந்திரம் பாடல் #1840
1 / 2





