தொடர்ந்து படிக்கread this section continuously
ஆனைந்து மாட்டி யமரர் குழாந்தொழத்தானந்த மில்லாத் தலைவ னருளதுதேனுந்து மாமல ருள்ளே தெளிந்ததோர்பாரைந்து குணமும் படைத்துநின் றானே.
உரைmeaning
அனைத்திற்கும் நாயகர்களாக விளங்குகின்ற மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவருக்கும் தீப ஆராதனை செய்து அமரர்களின் கூட்டம் தொழுது வணங்கும் போது, அந்த ஐந்து நாயகர்களாக இருந்து அவர்கள் புரியும் தொழில்களை அருளுவது, தனக்கென்று எந்த ஒரு முடிவும் இல்லாத தலைவனாகிய இறைவனின் திருவருளே ஆகும். தெவிட்டாத தேனாகிய பேரின்ப அமிழ்தத்தை வெளியே அலைந்து தேடாமல் உண்மை ஞானிகள் தமக்குள்ளேயே தேடி அடைகின்ற மாபெரும் மலராகிய, சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே, தெளிந்த ஜோதியாக வீற்றிருக்கின்ற ஒரு பேரின்ப அமிழ்தமாகவும் அந்தத் திருவருளே இருக்கின்றது. இந்த உலகத்தில் இருக்கின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து விதமான பூதங்களின் குணமாகவும் அந்தத் திருவருளே இருக்கின்றது. இப்படித் தமது திருவருளாலேயே அனைத்தையும் உருவாக்கி நிற்கின்றான் இறைவன்.
When the assembly of the immortals performs the lamp offering to the five who shine as lords of all, the murthys Brahma, Thirumal, Rudra, Maheswara and Sadasiva, and bows before them in worship, it is the sacred grace of the Lord, the chief who has no end of his own, that stands as those five lords and grants the works they perform. That same sacred grace is also the one nectar of great bliss that sits as a clear flame inside the thousand-petalled lotus of the sahasradala, the great flower in which the truly wise seek and find within themselves, and not by wandering outside, the honey of great bliss that never cloys. That same sacred grace is also the quality of the five elements of this world, earth, water, air, fire and sky. And so it is by his own sacred grace that the Lord has made all things and stands.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் நாயகர்களாக விளங்குகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளுக்கும் தீப ஆராதனை செய்து அமரர்களின் கூட்டம் தொழுது வணங்கும் போது,
When the assembly of the immortals performs the lamp offering to the five murthys who shine as lords of all, Brahma, Thirumal, Rudra, Maheswara and Sadasiva, and bows before them in worship,
- வரி 2Line 2
அந்த ஐந்து நாயகர்களாக இருந்து அவர்கள் புரியும் தொழில்களை அருளுவது, தனக்கென்று எந்த ஒரு முடிவும் இல்லாத தலைவனாகிய இறைவனின் திருவருளே ஆகும்.
it is the sacred grace of the Lord, the chief who has no end of his own, that stands as those five lords and grants the works they perform.
- வரி 3Line 3
தெவிட்டாத தேனாகிய பேரின்ப அமிழ்தத்தை வெளியே அலைந்து தேடாமல் உண்மை ஞானிகள் தமக்குள்ளேயே தேடி அடைகின்ற, சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே தெளிந்த ஜோதியாக வீற்றிருக்கின்ற பேரின்ப அமிழ்தமாகவும் அந்தத் திருவருளே இருக்கின்றது.
That same sacred grace is also the nectar of great bliss seated as a clear flame inside the thousand-petalled lotus of the sahasradala, the honey that never cloys, which the truly wise seek and find within themselves rather than by wandering outside.
- வரி 4Line 4
இந்த உலகத்தில் இருக்கின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் குணமாகவும் அதுவே இருக்கின்றது; இப்படித் தமது திருவருளாலேயே அனைத்தையும் உருவாக்கி நிற்கின்றான் இறைவன்.
It is also the quality of the five elements of this world, earth, water, air, fire and sky; and so it is by his own sacred grace that the Lord has made all things and stands.
திருமந்திரம் பாடல் #1832
1 / 2





