தொடர்ந்து படிக்கread this section continuously
உழைக்கொண்ட பூநீ ரொருங்குட னேந்திமழைக்கொண்ட மாமுகில் மேற்சென்ற வானோர்தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப்பிழைப்பின்றி யெம்பெரு மானரு ளாமே.
உரைmeaning
உண்மையான அன்போடு அருச்சனை செய்வதற்கு நறுமணம் மிக்க மலர்களையும், அபிஷேகம் செய்வதற்குத் தூய்மையான நீரையும் ஒன்றாகக் கைகளில் ஏந்தி வந்து, மழை நீரைக் கொண்ட மாபெரும் மேகக் கூட்டங்களுக்கு மேலே வசிக்கின்ற விண்ணுலகத் தேவர்களுக்குப் பூஜை செய்து, இந்த உலகில் பிறவி எடுக்கும் போது அதனுடன் சேர்ந்து வந்த பந்த பாசங்களினால் அனுபவிக்கின்ற பலவித துன்பங்களிலிருந்து தம்மை விடுவித்து அருளும்படி இறைவனைப் போற்றி வணங்கும் அடியவர்களுக்கு, இறைவனின் திருவருளானது எந்தவிதக் குற்றமும் இல்லாமல் பரிபூரணமாகக் கிடைக்கும்.
Devotees bring in their hands together the fragrant flowers for the archana offered with true love and the pure water for the abhisheka; they perform puja to the celestials of the heavenly world who dwell above the great banks of cloud that hold the rain; and they praise and bow to the Lord, asking him to release them from the many sorrows they suffer through the bonds and attachments that came with them when they took birth in this world. To such devotees the sacred grace of the Lord comes in full, with no flaw in it at all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மையான அன்போடு நறுமணம் மிக்க மலர்களையும் தூய்மையான நீரையும் ஒன்றாகச் சேர்த்துக் கைகளில் ஏந்திக் கொண்டு,
Bearing together in the hands, with true love, the fragrant flowers and the pure water,
- வரி 2Line 2
மழை நீரைக் கொண்டிருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டங்களுக்கு மேலே வசிக்கின்ற விண்ணுலகத் தேவர்களுக்குப் பூஜை செய்து,
performing puja to the celestials of the heavenly world who dwell above the great banks of cloud that hold the rain,
- வரி 3Line 3
உலகப் பிறப்போடு சேர்ந்து வந்த பந்த பாசங்களால் அனுபவிக்கின்ற பலவித துன்பங்களைப் போக்கி அருள வேண்டும் என்று இறைவனைப் போற்றி வணங்கினால்,
and praising and bowing to the Lord to ask that he remove the many sorrows suffered through the bonds and attachments that came with birth into this world,
- வரி 4Line 4
எமது பெருமானாகிய இறைவனின் திருவருள் எந்தவிதக் குற்றமும் இல்லாமல் பரிபூரணமாகக் கிடைக்கும்.
the sacred grace of our Lord comes in full, with no flaw in it at all.
திருமந்திரம் பாடல் #1833
1 / 2





