திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1837

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்றார்த்தெம தீசனருட் சேவடி யென்றன்மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்றதீர்த்தனை யாருந் திதித்துண ராரே.

உரை

இறைவனின் திருவருளை வேண்டிப் போற்றித் துதித்து, நறுமணம் மிக்க மலர்களைத் தூவி அருச்சனை செய்து, கை கூப்பி நின்று, திருநாமத்தைச் சொல்லிப் பெருங் கூச்சலிட்டு, இறைவனின் சிவந்த திருவடிகளை வணங்குகின்றார்கள். ஆனால் எமது தலைவனும், அனைத்திற்கும் முதல்வனும், முதுமை என்பதே இல்லாதவனும், அனைத்திற்கும் முதலான ஆதியின் வடிவமாக இருப்பவனும் ஆகிய பரிசுத்தமான புண்ணியனை, தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தைக் கடைபிடித்து உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனைப் போற்றித் துதித்து, நறுமணம் மிக்க மலர்களைத் தூவி அருச்சனை செய்து, கை கூப்பி நின்று,

  • வரி 2

    திருநாமத்தைச் சொல்லிப் பெருங் கூச்சலிட்டு, எமது இறைவனின் திருவருளை வேண்டி அவனுடைய சிவந்த திருவடிகளை வணங்குகின்றார்கள்.

  • வரி 3

    ஆனால் எமது தலைவனும், முதுமை என்பதே இல்லாதவனும், அனைத்திற்கும் முதலான ஆதியின் வடிவமாக நின்று அருள்கின்றவனும்,

  • வரி 4

    பரிசுத்தமான புண்ணியனுமாகிய அந்த இறைவனை, ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தைக் கடைபிடித்து எவரும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1837

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout