திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1836

தொடர்ந்து படிக்கread this section continuously

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்பயனறி வார்க்கரன் றானே பயிலும்நயனங்கள் மூன்றுடை யானடி சேரவயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.

உரை

பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய அறிவு ஒன்று உண்டு. பலவிதமான நறுமணம் மிக்க மலர்களைத் தூவி இறைவனுக்கு அருச்சனை செய்வதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை அறிந்து கொள்கின்ற அடியவர்களுக்கு, இறைவன் தாமாகவே படிப்படியாகப் பல அனுபவங்களைக் கொடுத்து அருள்வான். மூன்று திருக் கண்களைக் கொண்ட இறைவனின் திருவடியே கதி என்று முழுவதுமாகச் சரணடைந்த அடியவர்களுக்கு, அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையிலேயே இறைவன் வந்து நிற்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய அறிவு ஒன்று உண்டு; அதைப் பெறுவதற்குப் பலவிதமான நறுமணம் மிக்க மலர்களைத் தூவி அருச்சனை செய்ய வேண்டும்.

  • வரி 2

    அதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை அறிந்து கொள்கின்ற அடியவர்களுக்கு, இறைவன் தாமாகவே படிப்படியாகப் பல அனுபவங்களைக் கொடுத்து அருள்வான்.

  • வரி 3

    மூன்று திருக் கண்களைக் கொண்ட இறைவனின் திருவடியே கதி என்று முழுவதுமாகச் சரணடைந்தால்,

  • வரி 4

    அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையிலேயே இறைவன் எப்போதும் வந்து நிற்பான்.

திருமந்திரம் பாடல் #1836

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout