திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1842

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புறமேவித் திரியும் விரிசடை நந்தியைக்கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைதாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

உரை

உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய, சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல், பிரகாசமாகத் திகழும் ஜோதியாக இறைவன் வீற்றிருக்கின்றான். அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குருநாதனாகிய அந்த இறைவன், அனைத்து உயிர்களும் அங்கே உண்டாகின்ற பேரின்பப் பலனை அடைய வேண்டும் என்ற கருணையினாலேயே அமர்ந்திருக்கின்றான். அந்த இறைவனைத் தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களைக் கொண்டு போய்ச் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனுடன் நிலைபெற்று இருக்கும்படிச் சேர்க்கின்ற மனதின் திறமைக்குத் திறவுகோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய, சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரிடத்தில் பேரின்பம் உண்டாகின்றது.

  • வரி 2

    அந்தத் தாமரை மலரின் மேல் பிரகாசமாகத் திகழும் ஜோதியாக வீற்றிருந்து, அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குருநாதனாகிய இறைவன் அங்கு அமர்ந்திருக்கின்றான்.

  • வரி 3

    அந்த இறைவனைத் தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களைக் கொண்டு போய்ச் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனிடத்தில் சேர்க்க வேண்டும்.

  • வரி 4

    அவ்வாறு நிலைபெற்று இருக்கும்படிச் சேர்க்கின்ற மனதின் திறமைக்குத் திறவுகோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #1842

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout