தொடர்ந்து படிக்கread this section continuously
மஞ்சன மாலை நிலாவிய வானவர்நெஞ்சினு ளீசனிலை பெறு காரணமஞ்சமு தாமுப சாரமெட் டெட்டோடுமஞ்சலி யோடுங் கலந்தற்சித் தார்களே.
உரைmeaning
அடியவர்களால் அபிஷேகமும் மலர்மாலைகள் சூட்டி அலங்காரமும் செய்யப்பட்டு, இறைவனின் பிரதிநிதிகளாக வழிபடப்படுகின்ற வானுலகத்துத் தேவர்களின் நெஞ்சத்திற்குள் இறைவன் வீற்றிருந்து, அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குகின்றான். அதற்குக் காரணம் என்னவென்றால், அந்த அடியவர்கள் உண்மையான அன்போடு பஞ்சாமிர்தம் முதலாகிய பதினாறு விதமான உபசாரங்களைச் செய்து, இரண்டு கரங்களையும் கூப்பி மனதை இறைவன் மேல் வைத்து அருச்சனை செய்தார்கள் என்பதே ஆகும்.
The celestials of the heavenly world are bathed in abhisheka by devotees, adorned with flower garlands, and worshipped as the Lord's own representatives. The Lord dwells within the hearts of those celestials and grants his grace in the measure of the devotees' worship. And the reason he does so is this: those devotees, with true love, performed the sixteen kinds of upachara beginning with panchamirtham, and with both hands joined and their minds set on the Lord they made their archana.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அடியவர்களால் அபிஷேகமும் மலர்மாலைகள் சூட்டி அலங்காரமும் செய்யப்பட்டு, இறைவனின் பிரதிநிதிகளாக வழிபடப்படுகின்ற வானுலகத்துத் தேவர்கள்,
The celestials of the heavenly world, who are bathed in abhisheka by devotees, adorned with flower garlands, and worshipped as the Lord's own representatives,
- வரி 2Line 2
அவர்களுடைய நெஞ்சத்திற்குள் இறைவன் எப்போதும் வீற்றிருந்து, அடியவர்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருளை வழங்குகின்றான்; அதற்குக் காரணம் என்னவென்றால்,
have the Lord dwelling always within their hearts, granting his grace in the measure of the devotees' worship; and the reason for it is this,
- வரி 3Line 3
அடியவர்கள் பஞ்சாமிர்தம் முதலாகிய உணவைப் படைத்து, எட்டோடு எட்டாகிய பதினாறு விதமான உபசாரங்களைச் செய்தார்கள்.
the devotees set before him the offering of food beginning with panchamirtham, and performed the sixteen kinds of upachara, eight together with eight.
- வரி 4Line 4
இரண்டு கரங்களையும் ஒன்றாகக் கூப்பி, மனதை இறைவன் மேல் வைத்து, உண்மையான அன்போடு அருச்சனை செய்தார்கள்.
They joined both hands together, set their minds upon the Lord, and made their archana with true love.
திருமந்திரம் பாடல் #1827
1 / 2





