தொடர்ந்து படிக்கread this section continuously
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுள நீருளவண்ணலது கண்டருள் புரியா நிற்குமெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனைநண்ணியறி யாமல் நழுவுகின் றாரே.
உரைmeaning
இறைவன் விதித்த தர்மத்தைக் கடைபிடித்துப் பல புண்ணிய காரியங்களைச் செய்கின்றவர்களுக்கு, அவர்கள் இறைவனை வழிபடும் போது அதற்குத் தேவையான பூவும் நீரும் இறையருளால் எப்போதும் கிடைக்கும். ஆனால் எண்ணிக்கையில்லாத அளவு பெரும்பாலான மனிதர்கள், அனைத்து உயிர்களிலும் இறைவனைக் கண்டு அறிந்து கொண்டு அந்த உயிர்களின் மேல் கருணை செய்து, அதன் மூலம் இறைவனை நெருங்கிச் சென்று அவனை முழுவதும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல், அறியாமையால் இறைவனை விட்டு விலகிச் சென்ற பாவிகளாகவே வாழ்ந்து அழிகின்றார்கள்.
For those who keep to the dharma the Lord laid down and do many meritorious deeds, the flower and the water they need when they worship the Lord are always given to them by his grace. But countless numbers of people, the greater part of them, never see and know the Lord in every living being, never show compassion to those beings, and so never draw near him through that compassion and try to know him fully; through their own ignorance they live and perish as the sinners who have moved away from the Lord.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் விதித்த தர்மத்தைக் கடைபிடித்துப் பல புண்ணிய காரியங்களைச் செய்கின்றவர்களுக்கு, வழிபாட்டிற்குத் தேவையான பூவும் நீரும் இறையருளால் எப்போதும் கிடைக்கும்.
For those who keep to the dharma the Lord laid down and do many meritorious deeds, the flower and the water needed for worship are always given by his grace.
- வரி 2Line 2
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனை அனைத்து உயிர்களிலும் கண்டு அறிந்து, அந்த உயிர்களின் மேல் கருணை செய்யாமல் நிற்கின்ற,
But those who do not see and know the Lord who is chief of all in every living being, and do not show compassion to those beings,
- வரி 3Line 3
எண்ணிக்கையில்லாத அளவிற்குப் பெரும்பாலான மனிதர்கள், அத்தகைய பாவிகளாகவே இருந்து, எமது இறைவனாகிய சிவபெருமானை,
countless numbers of people, the greater part of them, remain such sinners and do not come near our Lord, Sivaperuman,
- வரி 4Line 4
நெருங்கிச் சென்று அறிந்து கொள்ளாமல், அறியாமையால் விலகிச் சென்று அழிந்து போகின்றார்கள்.
do not draw close and know him, and through their ignorance move away from him and perish.
திருமந்திரம் பாடல் #1828
1 / 2





