திருமூலர் அருளிய திருமந்திரம்
10. அருள் ஒளி

ஏழாம் தந்திரம் பாடல் 1814–1822 (9 பாடல்கள்)

அருளிற் றலைநின் றறிந்தழுந் தாகாரருளிற் றலைநில்லா ரைம்பாச நீங்காரருளிற் பெருமை யறியார் செறியாரருளிற் பிறந்திட் டிறந்தறி வாரே.

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தியாரா வமுதளித் தானந்தி பேர்நந்திபேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றிலனாரா வருட்கட லாடுகவென் றானே.

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்கூடிய வாறே குறியாக் குறிதந்தென்னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

உற்ற பிறப்பு முறுமல மானதும்பற்றிய மாயா படலமெனப் பண்ணியற்றனை நீக்கி யடிவைத்தான் பேர்நந்திகற்றன விட்டேன் கழலணிந் தேனே.

விளக்கினை யேற்றி வெளியை மறிமின்விளக்கினின் முன்னே வேதினை மாறும்விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவ தாமே.

ஒளியு மிருளு மொருக்காலுந் தீராவொளியுள் வோர்க்கன்றோ வொழியா தொளியுமொளியிருள் கண்டகண் போலே வேறாயுள்ளொளியிரு ணீங்கி யுயிர்சிவ மாமே.

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிநிறமே புகுந்தேனை நின்மல னாக்கியறமே புரிந்தெனக் காரமு தீய்ந்ததிறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.

அருளது வென்ற வகலிட மொன்றும்பொருளது வென்ற புகலிட மொன்றும்மருளது நீங்க மனம்புகுந் தானைத்தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

கூறுமின் னீர்முன் பிறந்தங் கிறந்தமைவேறொரு தெய்வத்தின் மெய்பொரு ணீங்கிடும்பாரணி யும்முடல் வீழவிட் டாருயிர்தேரணி வோமிது செப்பவல் லீரே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1814

1 / 9

0:000:00
10. அருள் ஒளிபாடல் 1814

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com