திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1816

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்கூடிய வாறே குறியாக் குறிதந்தென்னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

உரை

இறைவனுடைய திருவிளையாடல்களை ஆடியும், அவனுடைய பெருமைகளைப் போற்றிப் பாடியும், அவனுடைய மாபெரும் கருணையை எண்ணி அழுதும், அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும், தமக்குள்ளே தேடியும், இறைவனுடைய மாபெரும் தன்மையைக் கண்டு கொண்டேன். அப்படித் தேடிக் கண்டு கொண்ட இறைவனோடு சேருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வேறு எதிலும் சிந்தனையைச் செலுத்தாமல் இருக்கின்ற வழியை எமக்குக் கொடுத்து அருளி, எம்மோடு கலந்து நின்று, எம்முள்ளிருந்து ஞானமாக வெளிப்பட்டான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனுடைய திருவிளையாடல்களை ஆடியும், அவனுடைய பெருமைகளைப் போற்றிப் பாடியும், அவனுடைய மாபெரும் கருணையை எண்ணி அழுதும், அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும்,

  • வரி 2

    தமக்குள்ளே தேடியும், இறைவனுடைய மாபெரும் தன்மையைக் கண்டு கொண்டேன்.

  • வரி 3

    அப்படித் தேடிக் கண்டு கொண்ட இறைவனோடு சேருவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வேறு எதிலும் சிந்தனையைச் செலுத்தாமல் இருக்கின்ற வழியை அவன் எமக்குக் கொடுத்து அருளினான்.

  • வரி 4

    எம்மோடு கலந்து நின்று, தனது பேரருளை எமக்குக் கொடுத்து, எம்முள்ளிருந்து ஞானமாக வெளிப்பட்டான்.

திருமந்திரம் பாடல் #1816

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout