திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1815

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தியாரா வமுதளித் தானந்தி பேர்நந்திபேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றிலனாரா வருட்கட லாடுகவென் றானே.

உரை

இந்த உலகத்திற்குத் திரும்பவும் வந்துவிடாத பெரும் வழியைத் தந்து அருளிய மாபெரும் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆவான். என்றும் தெவிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை அளித்து அருளியவனும் அந்தக் குருநாதனாகிய பெருமை மிக்க நந்தியே. தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும் ஆயிரம் பெயர்களை உடைய பெருமானாக இருந்தாலும், தனக்கென்று தனிப் பெயர் ஒன்றும் இல்லாதவன் அவன். என்றும் தெவிட்டாத அமிழ்தமாகிய தனது பேரருள் பெருங்கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் திளைத்து இருங்கள் என்று தமது அடியவர்களுக்கு அவன் அருளினான்.

வரி வாரியாக

  • வரி 1

    இந்த உலகத்திற்குத் திரும்பவும் வந்துவிடாத பெரும் வழியைத் தந்து அருளிய மாபெரும் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆவான்.

  • வரி 2

    என்றும் தெவிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை அளித்து அருளியவனும் அந்தக் குருநாதனாகிய பெருமை மிக்க நந்தியே.

  • வரி 3

    தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும் ஆயிரம் பெயர்களை உடைய பெருமானாக இருந்தாலும், தனக்கென்று தனிப் பெயர் ஒன்றும் இல்லாதவன் அவன்.

  • வரி 4

    என்றும் தெவிட்டாத அமிழ்தமாகிய தனது பேரருள் பெருங்கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் திளைத்து இருங்கள் என்று தமது அடியவர்களுக்கு அவன் அருளினான்.

திருமந்திரம் பாடல் #1815

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout