தொடர்ந்து படிக்கread this section continuously
அருளிற் றலைநின் றறிந்தழுந் தாகாரருளிற் றலைநில்லா ரைம்பாச நீங்காரருளிற் பெருமை யறியார் செறியாரருளிற் பிறந்திட் டிறந்தறி வாரே.
உரைmeaning
ஒளியாகிய பேரருளில் உறுதியாக நின்று, அதை முழுவதுமாக அறிந்து கொண்டு, அதிலேயே அமிழ்ந்து அதுவாகவே ஆகாதவர்கள்; அந்தப் பேரருளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டு நிற்காதவர்கள்; ஐந்து விதமான புலன்களால் வருகின்ற பந்த பாசங்களை விட்டு நீங்காதவர்கள்; அந்தப் பேரருளில் கிடைக்கின்ற பெரும் பலனை அறிந்து கொள்ளாதவர்கள்; அதன் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ளாதவர்கள்; இவர்கள் பேரருளில் பிறந்து இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும், அந்தப் பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல், இறந்து போகின்ற உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.
Those who do not stand firm in the great grace which is light, know it wholly, sink into it and become it; those who do not take the reaching of that great grace as the very aim of their life; those who do not leave the bonds and attachments that come by way of the five senses; those who do not come to know the great fruit had in that grace; those who, knowing its fruit, do not raise themselves by it: these, though they were born in that great grace and came into this world as living souls, know only the worldly knowledge that dies, and do not know the undying great knowing that is in that grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒளியாகிய பேரருளில் உறுதியாக நின்று, அதை முழுவதுமாக அறிந்து கொண்டு, அதிலேயே அமிழ்ந்து அதுவாகவே ஆகாதவர்கள் உள்ளனர்.
There are those who do not stand firm in the great grace which is light, know it wholly, sink into it and become it.
- வரி 2Line 2
அந்தப் பேரருளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டு நிற்காதவர்கள், ஐந்து விதமான புலன்களால் வருகின்ற பந்த பாசங்களை விட்டு நீங்குவதில்லை.
Those who do not take the reaching of that great grace as the very aim of their life never leave the bonds and attachments that come by way of the five senses.
- வரி 3Line 3
அந்தப் பேரருளில் கிடைக்கின்ற பெரும் பலனை அறியாதவர்கள், அதன் மூலம் தம்மை மேன்மைப்படுத்திக் கொள்வதும் இல்லை.
Those who do not know the great fruit had in that grace do not raise themselves by it either.
- வரி 4Line 4
இவர்கள் பேரருளில் பிறந்து இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும், அதில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல், இறந்து போகின்ற உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.
Though they were born in that great grace and came into this world as living souls, they know only the worldly knowledge that dies, and not the undying great knowing that is in it.
திருமந்திரம் பாடல் #1814
1 / 2





