தொடர்ந்து படிக்கread this section continuously
கூறுமின் னீர்முன் பிறந்தங் கிறந்தமைவேறொரு தெய்வத்தின் மெய்பொரு ணீங்கிடும்பாரணி யும்முடல் வீழவிட் டாருயிர்தேரணி வோமிது செப்பவல் லீரே.
உரைmeaning
உலகத்தில் கற்றதே உண்மை என்று நீங்கள் நம்புவது உண்மை என்றால், இதற்கு முன் ஜென்மத்தில் நீங்கள் எங்குப் பிறந்து அங்கு எப்படி இறந்தீர்கள் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அது போலவே, உள்ளிருக்கும் சிவத்தைத் தவிர வெளியில் வேறு ஒரு தெய்வம் இருக்கின்றது என்று உலகோர் சொல்லுவது உண்மை போல் தெரியும். அப்படி உண்மை போல் தெரிகின்ற பொருள், உங்களுடைய உடல் அழியும் போது உங்களை விட்டு நீங்கிப் போய்விடும். ஆகவே, உலகத்தில் பிறக்கும் போது நீங்கள் அணிந்து வந்த உடல் எனும் சட்டையை இந்த உலகத்திலேயே விழுந்து கிடக்கும்படி விட்டுவிட்டு, அந்த உடலுக்குள் இருந்த அருமையான உயிர் எனும் தேராகச் செயல்புரிகின்ற சிவத்தை அணிந்து கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு முக்கியமான இந்த உண்மையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல முடிந்தவர்கள் சொல்லுங்கள்.
If what you believe, that only what is learned in the world is true, were itself true, could you say where you were born in the birth before this one and how you died there? In just the same way, what people of the world say, that besides the Sivam within there is some other god outside, will look like the truth. That thing which so looks like the truth will leave you and go when your body perishes. So let the shirt that is the body, which you put on when you were born into the world, fall and lie in this world itself, and put on instead the Sivam that works as the precious life which was inside that body. Those who are able to tell others this truth, so important for life, tell them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகத்தில் கற்றதே உண்மை என்று நீங்கள் நம்புவது உண்மை என்றால், இதற்கு முன் ஜென்மத்தில் நீங்கள் எங்குப் பிறந்து அங்கு எப்படி இறந்தீர்கள் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?
If what you believe, that only what is learned in the world is true, were itself true, could you say where you were born in the birth before this one and how you died there?
- வரி 2Line 2
உள்ளிருக்கும் சிவத்தைத் தவிர வெளியில் வேறு ஒரு தெய்வம் இருக்கின்றது என்று உலகோர் சொல்லுவது உண்மை போல் தெரியும்; அப்படித் தெரிகின்ற பொருள் உங்களுடைய உடல் அழியும் போது உங்களை விட்டு நீங்கிப் போய்விடும்.
What people of the world say, that besides the Sivam within there is some other god outside, will look like the truth, and that thing which so looks like the truth will leave you and go when your body perishes.
- வரி 3Line 3
உலகத்தில் பிறக்கும் போது நீங்கள் அணிந்து வந்த உடல் எனும் சட்டையை இந்த உலகத்திலேயே விழுந்து கிடக்கும்படி விட்டுவிட்டு, அந்த உடலுக்குள் இருந்த அருமையான உயிர் எனும் தேராகச் செயல்புரிகின்ற சிவத்தை அணிந்து கொள்ளுங்கள்.
Let the shirt that is the body, which you put on when you were born into the world, fall and lie in this world itself, and put on instead the Sivam that works as the precious life which was inside that body.
- வரி 4Line 4
வாழ்க்கைக்கு முக்கியமான இந்த உண்மையை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல முடிந்தவர்கள் சொல்லுங்கள்.
Those who are able to tell others this truth, so important for life, tell them.
திருமந்திரம் பாடல் #1822
1 / 2





