திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1821

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

அருளது வென்ற வகலிட மொன்றும்பொருளது வென்ற புகலிட மொன்றும்மருளது நீங்க மனம்புகுந் தானைத்தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

உரை

இறையருள் என்று அழைக்கப்படும் பரம்பொருள், அண்ட சராசரங்களிலும் அவற்றைத் தாண்டியும் இருக்கின்ற பரவெளியில் பொருந்தி இருக்கும். உயிர்கள் என்று அழைக்கப்படும், பரம்பொருளின் அம்சமான ஆன்மாக்கள், தாம் பிறவி எடுத்து வந்து சேர்ந்த இந்த உலகத்தில் பொருந்தி இருக்கும். தாம் பொருந்தி இருக்கின்ற இந்த உலகத்தில் பந்தம் பாசங்கள் ஆகிய மாயையின் மயக்கம் நீங்கும்படி செய்து, அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருள் வந்து அடியவர்களுடைய உள்ளத்திற்குள் புகுந்தான். அப்படித் தமது உள்ளத்திற்குள் புகுந்த இறைவனைத் தெளிவாக அறிந்து உணர்ந்து கொண்டு, அவனையே உறுதியாகப் பற்றிக் கொண்டு இருந்தால், பிறகு வரும் காலத்தில் இறைவனிடம் சென்று அடையும் நிலை அதுவே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    இறையருள் என்று அழைக்கப்படும் பரம்பொருள், அண்ட சராசரங்களிலும் அவற்றைத் தாண்டியும் இருக்கின்ற பரவெளியில் பொருந்தி இருக்கும்.

  • வரி 2

    உயிர்கள் என்று அழைக்கப்படும், பரம்பொருளின் அம்சமான ஆன்மாக்கள், தாம் பிறவி எடுத்து வந்து சேர்ந்த இந்த உலகத்தில் பொருந்தி இருக்கும்.

  • வரி 3

    இந்த உலகத்தில் பந்தம் பாசங்கள் ஆகிய மாயையின் மயக்கம் நீங்கும்படி செய்து, அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருள் வந்து அடியவர்களுடைய உள்ளத்திற்குள் புகுந்தான்.

  • வரி 4

    அப்படித் தமது உள்ளத்திற்குள் புகுந்த இறைவனைத் தெளிவாக அறிந்து உணர்ந்து கொண்டு, அவனையே உறுதியாகப் பற்றிக் கொண்டு இருந்தால், பிறகு வரும் காலத்தில் இறைவனிடம் சென்று அடையும் நிலை அதுவே ஆகும்.

திருமந்திரம் பாடல் #1821

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout