திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1820

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிநிறமே புகுந்தேனை நின்மல னாக்கியறமே புரிந்தெனக் காரமு தீய்ந்ததிறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.

உரை

இறைவனை உள்ளுக்குள் தேடாமல், வெளியில் கோயில் குளம் என்று அலைந்து திரிந்த யாம், பாடல் #1819 இல் சொல்லியபடி எமக்குள் இருக்கின்ற ஆன்மாவை உணர்ந்து கொண்ட பிறகு, அவன் எமது தலைமேல் தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற திருவடிகளை அணிவித்தான். இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி, எந்த மலமும் இல்லாதவனாக எம்மை ஆக்கிவிட்டான். பேரருளாகிய தர்மத்தின் வழியாக வந்து, எப்போதும் தெவிட்டாத அமிழ்தத்தை எமக்குக் கொடுத்து அருளினான். பரம்பொருளாகிய இறைவனுடைய அந்த மாபெரும் கருணையை நினைத்துப் பார்த்து, அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே ஆழ்ந்து இருந்தேன்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை உள்ளுக்குள் தேடாமல், வெளியில் கோயில் குளம் என்று அலைந்து திரிந்த எமது தலைமேல், தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற திருவடிகளை அவன் அணிவித்தான்.

  • வரி 2

    இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி, எந்த மலமும் இல்லாதவனாக எம்மை ஆக்கிவிட்டான்.

  • வரி 3

    பேரருளாகிய தர்மத்தின் வழியாக வந்து, எப்போதும் தெவிட்டாத அமிழ்தத்தை எமக்குக் கொடுத்து அருளினான்.

  • வரி 4

    பரம்பொருளாகிய இறைவனுடைய அந்த மாபெரும் கருணையை நினைத்துப் பார்த்து, அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே ஆழ்ந்து இருந்தேன்.

திருமந்திரம் பாடல் #1820

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout