திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1819

ஏழாம் தந்திரம்10. அருள் ஒளி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒளியு மிருளு மொருக்காலுந் தீராவொளியுள் வோர்க்கன்றோ வொழியா தொளியுமொளியிருள் கண்டகண் போலே வேறாயுள்ளொளியிரு ணீங்கி யுயிர்சிவ மாமே.

உரை

ஜோதியாகிய ஞானமும் இருளாகிய மாயையும் எந்தவொரு காலத்திலும் இல்லாமல் போகப் போவதில்லை. உண்மையான ஞானமாகிய ஒளியைத் தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அந்த ஒளி எப்போதும் நீங்காத ஜோதியாக வீற்றிருக்கும். தாம் பார்க்கின்ற வெளிச்சத்தையும் இருட்டையும் மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்ற புறக் கண்களைப் போல் இல்லாமல், பார்க்கின்ற அனைத்தும் மாயை என்பதை அறிந்து, இறைவனுடைய அம்சமாகவே உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது, இருளாகிய மாயை நீங்கி உயிரானது சிவமாகவே ஆகிவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    ஜோதியாகிய ஞானமும் இருளாகிய மாயையும் எந்தவொரு காலத்திலும் இல்லாமல் போகப் போவதில்லை.

  • வரி 2

    உண்மையான ஞானமாகிய ஒளியைத் தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அந்த ஒளி எப்போதும் நீங்காத ஜோதியாக வீற்றிருக்கும்.

  • வரி 3

    தாம் பார்க்கின்ற வெளிச்சத்தையும் இருட்டையும் மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்ற புறக் கண்களைப் போல் இல்லாமல், பார்க்கின்ற அனைத்தும் மாயை என்பதை அறிய வேண்டும்.

  • வரி 4

    இறைவனுடைய அம்சமாகவே உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது, இருளாகிய மாயை நீங்கி உயிரானது சிவமாகவே ஆகிவிடும்.

திருமந்திரம் பாடல் #1819

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout