தொடர்ந்து படிக்கread this section continuously
விளக்கினை யேற்றி வெளியை மறிமின்விளக்கினின் முன்னே வேதினை மாறும்விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவ தாமே.
உரைmeaning
தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்ற சக்தியாகிய விளக்கை ஏற்றி, தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களைத் தடுத்து நிறுத்தினால், மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின் முன்பே உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக மாறும். அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனுடைய ஜோதியை உண்மையாக உணர்ந்து கொள்ளும்படி விளங்க வைக்கும் தெளிவு உடைய ஞானிகள் எடுத்துரைத்து விளக்கினால், முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய மாபெரும் ஜோதியாக இருப்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.
If the lamp of the power that lies asleep within is lit, and the senses that go out to the outer world are held back, then before the great knowing which is the great flame all worldly knowledge turns into true knowledge. And the supreme being is himself that great flame, which can be understood in full when the wise, who have the clarity to make the flame of that great knowing truly felt, expound it and explain it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்ற சக்தியாகிய விளக்கை ஏற்றி, தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களைத் தடுத்து நிறுத்துங்கள்.
Light the lamp of the power that lies asleep within, and hold back the senses that go out to the outer world.
- வரி 2Line 2
அப்படிச் செய்தால், மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின் முன்பே உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக மாறும்.
If that is done, then before the great knowing which is the great flame all worldly knowledge turns into true knowledge.
- வரி 3Line 3
அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனுடைய ஜோதியை உண்மையாக உணர்ந்து கொள்ளும்படி விளங்க வைக்கும் தெளிவு உடையவர்கள் ஞானிகள்.
Those who have the clarity to make the flame of that great knowing which is God truly felt and understood are the wise.
- வரி 4Line 4
அவர்கள் எடுத்துரைத்து விளக்கினால் முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய மாபெரும் ஜோதியாக இருப்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.
The great flame that can be understood in full when they expound it and explain it is the supreme being himself.
திருமந்திரம் பாடல் #1818
1 / 2





