துரியங்கள் மூன்று சொருகுஇட னாகிஅரிய உரைத்தாரம் அங்கே அடக்கிமருவிய சாம்பவி கேசரி உண்மைபெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.
சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம்ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரைஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரிநாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்டமோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம்வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரேஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே.
யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம்ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்ஆகத் தகும்வேத கேசரி சாம்பவியோகத்துக் கேசரி யோகமுத் திரையே.
யோகிஎண் சித்தி அருளொலி வாதனைபோகி தன் புத்தி புருடார்த்த நன்னெறிஆகும்நன் சத்தியும் ஆதார சோதனைஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே.
துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம்அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும்தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மைநவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரைஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரைதேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரைகானிக்கும் முத்திரை கண்ட சமயமே.
தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும்பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும்மேல்நெறி கண்டது வெண்மதி மேதினிநீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே.
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னிஉளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்உளதுறும் யோகி உடல்விட்டால் தானே.
தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாதுபோன வியோகி புகலிடம் போந்துபின்ஆனவை தீர நிரந்தர மாயோகம்ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.
தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கிஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்துதானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன்ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச்சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர்புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே.
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்தானற மோனச் சமாதியுள் தங்கியேதானவன் ஆகும் பரகாயம் சாராதேஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே.
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.
உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள்பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன்என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானிதன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல்இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே.
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்நொந்து நாய்நரி நுகரின் நுண்செருவந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே.
எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில்அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும்மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பதுநண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
நவமிகு சாணாலே நல்லாழம் செய்துகுவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்பவமறு நற்குகை பத்மா சனமே.
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடைநன்மலர்ச் சோலை நகரின்நற் பூமிஉன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே.
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணிநிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்துவிஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டுமுஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலேபொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே.
நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்துஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப்போதறு கண்ணமும் நறும் பொலிவித்துமீதில் இருத்தி விரித்திடு வீரே.
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்துபொரித்த கறிபோ னகம் இள நீரும்குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வைதரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும்போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார்மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே.
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்துமேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்காதலில் சோடசம் காண்உப சாரமே.
உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும்உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்விதியில் பிரமாதி கள்மிகு சத்திகதியில் கரணம் கலைவை கரியே.
செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.
வந்திடு பேத மெலாம்பர விந்துமேல்தந்திடு மாமாயை வாகேசி தற்பரைஉந்து குடிலையோடு ஏமுறு குண்டலிவிந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.
விளங்கு நிவர்த்தாதி மேலக ராதிவளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்துகளங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணிஉளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.
அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்வந்த வியாபி எனலாய அந்நெறிகந்தம தாகிய காரண காரியம்தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே.
வீயம தாகிய விந்துவின் சத்தியால்ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்காயஐம் பூதமும் காரிய மாயையில்ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே.
புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்துநிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மைஉறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே.
கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதறநின்ற படம்கட மாய்நிலை நிற்றலின்கண்டக லாதியின் காரண காரியத்துஅண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.
அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்திஇதுவித்தி லேஉள வாற்றை உணரார்மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே.
வித்தினில் அன்றி முளையில்லை அம்முளைவித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லைவித்தும் முளையும் உடனன்றி வேறில்லைஅத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே.
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டுஇருந்தன முன்னாள் இரதமது ஆகுமே.
இரதம் முதலான ஏழ்தாது மூன்றில்உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல்அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின்மருவிய விந்து வளரும்கா யத்திலே.
காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக்காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்துநேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.
அழிகின்ற விந்து அளவை அறியார்கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார்அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர்அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே.
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தேசேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
தானே அருளால் சிவயோகம் தங்காதுதானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே.
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டுஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.
ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடுஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே.
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமேஎய்யும் கலைகாலம் இந்து பருதிகால்நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறிசெய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.
விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



