திருமூலர் அருளிய திருமந்திரம்
4. சதாசிவ லிங்கம்

ஏழாம் தந்திரம் பாடல் 1730–1752 (23 பாடல்கள்)

கூடிய பாத மிரண்டும் படிமிசைபாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்தேடு முகமைந்துஞ் செங்கணின் மூவைந்துநாடுஞ் சதாசிவம் நல்லொளி முத்தே.

வேதா நெடுமா லுருத்திரன் மேலீசன்மீதான வைமுகன் விந்துவு நாதமுமாதார சத்தியு மாதிச் சிவனோடுஞ்சாதாரண மாகுஞ் சதாசிவன் றானே.

ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலையாகின்ற சத்தியி னுள்ளே கதிரெழவாகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபினாகின்ற சத்தியு ளத்திசை பத்தே.

அத்திசைக் குள்ளே யமர்ந்தன வாறங்கமத்திசைக் குள்ளே யமர்ந்தன நால்வேதமத்திசைக் குள்ளே யமர்ந்த சரிதையோடத்திசைக் குள்ளே யமைந்த சமையமே.

சமையத் தெழுந்த வவத்தை யீரைந்துளசமையத் தெழுந்த விராசி யீராறுளசமையத் தெழுந்த சதிர் ரீரெட்டுளசமையத் தெழுந்த சதாசிவன் றானே.

நடுவு கிழக்குத் தெற்குத்தர மேற்குநடுவு படிகநற் குங்கும வன்னமடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பாலடியற் கருளிய முகமிவை யைந்தே.

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுளவஞ்சி னோடைந்து கரதலந் தானுளவஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்சத்தி யுருவ மருவஞ் சதாசிவஞ்சத்தி சிவந்தத்துவ முப்பத்து ஆறே.

தத்துவ மாவ தருவஞ் சராசரந்தத்துவ மாவ துருவஞ் சுகோதையதத்துவ மெல்லாஞ் சகலமு மாய்நிற்குந்தத்துவ மாகுஞ் சதாசிவந் தானே.

கூறுமி னூறு சதாசிவ னெம்மிறைவேறோரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்குமேறுகை செய்தொழில் வானவர் தம்மோடுமாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

இருளார்ந்த கண்டமு மேந்து மழுவுஞ்சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையுமருளார்ந்த சிந்தையெம் மாதிப் பிரானைத்தெருளார்ந் தென்னுள்ளே தெளிந்திருந் தேனே.

சத்தி தானிற்கின்ற வைமுகஞ் சாற்றிடிலுத்தர வாம முரையற் றிருந்திடுந்தத்துவம் புரவி தற்புருடன் சீரமத்த வகோர மகுடத்தீசா னனே.

நாணுநல் லீசானம் நடுவுச்சி தானாகுந்தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங்காணு மகோர மிருதையங் குய்யமாம்வாணுறு வாமமாஞ் சத்திநற் பாதமே.

நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணாம்வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்செஞ்சுறு செஞ்சுடர்கே சரி மின்னாகுஞ்செஞ்சுடர் போலுந் தேசாயுதந் தானே.

எண்ணி லிதைய மிறைஞான சத்தியாம்விண்ணிற் பரசிர மிக்க சிகையாகிவண்ணக் கவசம் வனப்புடை யிச்சையாம்பண்ணுங் கிரிகை பரநேத்திரத் திலே.

சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடுஞ்சத்தியறு கோணஞ் சயனத்தை யுற்றிடுஞ்சத்திநால் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ்சத்தியுரு வாஞ் சதாசிவந் தானே.

மாநந்தி யெத்தனை கால மழைக்கினுந்தானந்தி யஞ்சின் றனிச்சுடராய் நிற்குங்கானந்தி யுந்திக் கடந்து கமலத்தின்மேனந்தி யொன்பதின் மேவிநின் றானே.

ஒன்றிய வாறு முடலினுடன் கிடந்தென்று மெம்மீச னடக்கு மியல்வதுதென்ற லைத்தேறத் திருந்துஞ் சிவனடிநின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.

உணர்ந்தே னுலகினி லொண் பொருளானைக்குணர்ந்தேன் குவலையங் கோயிலென் னெஞ்சம்புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யேபணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

ஆங்கவை மூன்றினு மாரழல் வீசிடத்தாங்கிடு மீரேழுந் தானடு வானதிலோங்கிய வாதியு மந்தமு மாமெனவீங்கிவை தம்முட லிந்துவு மாமே.

தன்மேனி தான்சிவ லிங்கமாய் நின்றிடுந்தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்தன்மேனியில் தானாகுந் தற்பரந் தானே.

ஆரு மறியா ரகார மதாவதுபாரு முகாரம் பகுந்திட்ட நாடிலத்தார மிரண்டுந் தரணி முழுதுமாய்மாறி யெழுந்திடு மோசைய தாமே.

இலிங்க நற்பீட மிசையு மோங்காரமிலிங்கம் நற்கண்டம் நிறையு மகாரமிலிங்கத்து வட்ட முறையு முகாரமிலிங்க வுகாரம் நிறைவிந்து நாதமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1730

1 / 23

0:000:00
4. சதாசிவ லிங்கம்பாடல் 1730

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com