தொடர்ந்து படிக்கread this section continuously
ஒன்றிய வாறு முடலினுடன் கிடந்தென்று மெம்மீச னடக்கு மியல்வதுதென்ற லைத்தேறத் திருந்துஞ் சிவனடிநின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.
உரைmeaning
இறையருளால் ஒன்றாகச் செயல்படுகின்ற ஆறு சக்கரங்களும் உடலோடு சேர்ந்து கிடந்து, எப்போதும் எம்பெருமானாகிய இறைவன் தமக்குள் அடங்கி இருக்கின்ற இயல்பான தன்மையாகிவிடும். அதன் பிறகு, அழகிய தலையை உடையவனாகிய இறைவனைத் தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெறுவதற்காக, தீய மலங்களைத் திருத்தி நன்மையை அருளுகின்ற அந்தச் சிவனுடைய திருவடியை, எமது நெஞ்சத்தின் உள்ளே நின்று வணங்கித் தொழுதேன்.
The six chakras, which by the grace of God act as one, lie together with the body, and it becomes the natural state in which our Lord God is always contained within oneself. After that, so as to realize fully within myself and gain clarity about God who has the beautiful head, I stood within my own heart and bowed and worshipped the sacred foot of that Sivan who corrects the evil malas and graciously gives good.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறையருளால் ஒன்றாகச் செயல்படுகின்ற ஆறு சக்கரங்களும் உடலோடு சேர்ந்து கிடந்து,
The six chakras, which by the grace of God act as one, lie together with the body,
- வரி 2Line 2
எப்போதும் எம்பெருமானாகிய இறைவன் தமக்குள் அடங்கி இருக்கின்ற இயல்பான தன்மையாகிவிடும்.
and it becomes the natural state in which our Lord God is always contained within oneself.
- வரி 3Line 3
அதன் பிறகு, அழகிய தலையை உடையவனாகிய இறைவனைத் தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெறுவதற்காக, தீய மலங்களைத் திருத்தி நன்மையை அருளுகின்ற அந்தச் சிவனுடைய திருவடியை,
After that, so as to realize fully within myself and gain clarity about God who has the beautiful head, the sacred foot of that Sivan who corrects the evil malas and graciously gives good
- வரி 4Line 4
எமது நெஞ்சத்தின் உள்ளே நின்று வணங்கித் தொழுதேன்.
is what I stood and bowed to and worshipped within my own heart.
திருமந்திரம் பாடல் #1747
1 / 2





