தொடர்ந்து படிக்கread this section continuously
மாநந்தி யெத்தனை கால மழைக்கினுந்தானந்தி யஞ்சின் றனிச்சுடராய் நிற்குங்கானந்தி யுந்திக் கடந்து கமலத்தின்மேனந்தி யொன்பதின் மேவிநின் றானே.
உரைmeaning
மாபெரும் குருநாதராகிய இறைவனை எத்தனை காலம் வேண்டித் தொழுதாலும், தமக்குள்ளேயே இருக்கின்ற அந்தக் குருநாதராகிய இறைவன், ஒளிமயமான வடிவத்தில் தனிச் சுடராகவே நின்று வெளிப்படுவார். குருநாதர் காட்டிய வழியில், மூச்சுக் காற்று வயிற்றைக் கடந்து சென்று, மேலே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரைச் சென்று அடையும். அதற்கும் மேலே ஜோதியாக வீற்றிருக்கின்ற அந்தக் குருநாதராகிய இறைவன், அந்தத் தாமரையையும் கடந்து எட்டாவது வெளியும், அதையும் கடந்த ஒன்பதாவது வெளியும் வரை, அந்த ஒன்பது இடங்களிலும் முழுவதுமாக நிறைந்து நிற்பதுவே சதாசிவ இலிங்கம் ஆகும்.
However long one beseeches and worships the great guru who is God, that same guru who is God, dwelling within oneself, stands forth as a single flame in a form wholly of light. By the way the guru showed, the breath passes beyond the belly and reaches the thousand-petalled lotus above. And that guru who is God, seated as a flame of light above that lotus, stands filling entirely all nine places, out past the lotus to the eighth space and to the ninth space beyond it; and that standing is the Sadasiva lingam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மாபெரும் குருநாதராகிய இறைவனை எத்தனை காலம் வேண்டித் தொழுதாலும்,
However long one beseeches and worships the great guru who is God,
- வரி 2Line 2
தமக்குள்ளேயே இருக்கின்ற அந்தக் குருநாதராகிய இறைவன், ஒளிமயமான வடிவத்தில் தனிச் சுடராகவே நின்று வெளிப்படுவார்.
that same guru who is God, dwelling within oneself, stands forth as a single flame in a form wholly of light.
- வரி 3Line 3
குருநாதர் காட்டிய வழியில், மூச்சுக் காற்று வயிற்றைக் கடந்து சென்று, மேலே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரைச் சென்று அடையும்.
By the way the guru showed, the breath passes beyond the belly and reaches the thousand-petalled lotus above.
- வரி 4Line 4
அதற்கும் மேலே ஜோதியாக வீற்றிருக்கின்ற அந்தக் குருநாதராகிய இறைவன், அந்தத் தாமரையையும் கடந்து எட்டாவது வெளியும், அதையும் கடந்த ஒன்பதாவது வெளியும் வரை, அந்த ஒன்பது இடங்களிலும் முழுவதுமாக நிறைந்து நிற்பதுவே சதாசிவ இலிங்கம் ஆகும்.
And that guru who is God, seated as a flame of light above that lotus, stands filling entirely all nine places, out past the lotus to the eighth space and to the ninth space beyond it; and that standing is the Sadasiva lingam.
திருமந்திரம் பாடல் #1746
1 / 2





