திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1745

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடுஞ்சத்தியறு கோணஞ் சயனத்தை யுற்றிடுஞ்சத்திநால் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ்சத்தியுரு வாஞ் சதாசிவந் தானே.

உரை

முந்தைய பாடலில் சொன்ன மூன்று சக்திகளின் வடிவம் இலிங்க வடிவத்தில் அமையும்போது, நான்கு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில், தண்ணீரைப் போலத் தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும் ஞான சக்தியாக நின்றிடும். ஆறு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில், சயன நிலையில் படுத்துக் கிடக்கும் இச்சா சக்தியாக வீற்றிருக்கும். நான்கு வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில், மேக நீரைப் போலச் சுழன்று கொண்டே இருக்கின்ற கிரியா சக்தியாக இருந்திடும். இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின் இலிங்க வடிவங்களாக இருப்பது சதாசிவ மூர்த்தி ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் சொன்ன மூன்று சக்திகளின் வடிவம் இலிங்க வடிவத்தில் அமையும்போது, நான்கு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில், தண்ணீரைப் போலத் தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும் ஞான சக்தியாக நின்றிடும்.

  • வரி 2

    ஆறு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில், சயன நிலையில் படுத்துக் கிடக்கும் இச்சா சக்தியாக வீற்றிருக்கும்.

  • வரி 3

    நான்கு வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில், மேக நீரைப் போலச் சுழன்று கொண்டே இருக்கின்ற கிரியா சக்தியாக இருந்திடும்.

  • வரி 4

    இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின் இலிங்க வடிவங்களாக இருப்பது சதாசிவ மூர்த்தி ஆகும்.

திருமந்திரம் பாடல் #1745

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout