தொடர்ந்து படிக்கread this section continuously
எண்ணி லிதைய மிறைஞான சத்தியாம்விண்ணிற் பரசிர மிக்க சிகையாகிவண்ணக் கவசம் வனப்புடை யிச்சையாம்பண்ணுங் கிரிகை பரநேத்திரத் திலே.
உரைmeaning
இறைவனுடைய மூன்று விதமான சக்திகள் எப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், இதயமானது இறைவனுடைய ஞான சக்தியாக இருக்கின்றது. இறைவனுடைய தலையும், அதன் மேலுள்ள திருமுடியும், பல வண்ணங்கள் உள்ள கவசமும், செழுமையான உடையும் இச்சா சக்தியாக இருக்கின்றன. இறைவனுடைய திருவருள் கண்களே கிரியா சக்தியாக இருக்கின்றன.
If one examines how the three kinds of power of God stand, then the heart stands as the Jnana Shakti of God, the power of knowledge. The head of God, the sacred crown above it, the armour of many colours and the rich garment stand as the Iccha Shakti, the power of will. And the eyes of his grace stand as the Kriya Shakti, the power of action.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனுடைய மூன்று விதமான சக்திகள் எப்படி இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால், இதயமானது இறைவனுடைய ஞான சக்தியாக இருக்கின்றது.
If one examines how the three kinds of power of God stand, then the heart stands as the Jnana Shakti of God, the power of knowledge.
- வரி 2Line 2
இறைவனுடைய தலையும், அதன் மேலுள்ள திருமுடியும்,
The head of God and the sacred crown above it,
- வரி 3Line 3
பல வண்ணங்கள் உள்ள கவசமும், செழுமையான உடையும் இச்சா சக்தியாக இருக்கின்றன.
together with the armour of many colours and the rich garment, stand as the Iccha Shakti, the power of will.
- வரி 4Line 4
இறைவனுடைய திருவருள் கண்களே கிரியா சக்தியாக இருக்கின்றன.
And the eyes of his grace stand as the Kriya Shakti, the power of action.
திருமந்திரம் பாடல் #1744
1 / 2





