திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1743

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணாம்வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்செஞ்சுறு செஞ்சுடர்கே சரி மின்னாகுஞ்செஞ்சுடர் போலுந் தேசாயுதந் தானே.

உரை

இறைவனுடைய ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை, ஒரு தீமையும் இல்லாத ஒளி வடிவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் பச்சை நிறம், பசுமையாக நன்மையை அருளுவதைக் குறிப்பதாகும். இறைவனுடைய செழுமை பொருந்திய, சிவந்த திருமேனியாகிய சுடர் ஒளிக்குச் சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி வடிவம் ஆகும். சிவந்த சுடரைப் போலப் பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற அந்த உறுப்புகளே, தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனுடைய ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை,

  • வரி 2

    ஒரு தீமையும் இல்லாத ஒளி வடிவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன; அவற்றின் பச்சை நிறம், பசுமையாக நன்மையை அருளுவதைக் குறிப்பதாகும்.

  • வரி 3

    இறைவனுடைய செழுமை பொருந்திய, சிவந்த திருமேனியாகிய சுடர் ஒளிக்குச் சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி வடிவம் ஆகும்.

  • வரி 4

    சிவந்த சுடரைப் போலப் பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற அந்த உறுப்புகளே, தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #1743

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout