திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1748

ஏழாம் தந்திரம்4. சதாசிவ லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உணர்ந்தே னுலகினி லொண் பொருளானைக்குணர்ந்தேன் குவலையங் கோயிலென் னெஞ்சம்புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யேபணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

உரை

உலகமெங்கும் உள்ள அனைத்துப் பொருளிலும் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற மாபெரும் பொருளாகிய இறைவனை, முந்தைய பாடலில் சொன்னபடி எமக்குள்ளேயே உணர்ந்தேன். உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற அந்த இறைவன் வீற்றிருக்கும் கோயிலாக எமது நெஞ்சத்துக்குள்ளேயே அவனைக் கொண்டு வந்தேன். அவ்வாறு எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனோடு ஒன்றாகக் கலந்துவிட்டேன். இது பொய் இல்லை, உண்மையே ஆகும். எமக்குள்ளிருந்தே, அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனைப் பணிந்து தொழுதேன். அப்போது, எமக்குள்ளிருந்து பாடல்களாகவும் ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்.

வரி வாரியாக

  • வரி 1

    உலகமெங்கும் உள்ள அனைத்துப் பொருளிலும் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற மாபெரும் பொருளாகிய இறைவனை எமக்குள்ளேயே உணர்ந்தேன்.

  • வரி 2

    உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற அந்த இறைவன் வீற்றிருக்கும் கோயிலாக எமது நெஞ்சத்துக்குள்ளேயே அவனைக் கொண்டு வந்தேன்.

  • வரி 3

    அவ்வாறு எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனோடு ஒன்றாகக் கலந்துவிட்டேன்; இது பொய் இல்லை, உண்மையே ஆகும்.

  • வரி 4

    எமக்குள்ளிருந்தே அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனைப் பணிந்து தொழுதேன்; அப்போது, எமக்குள்ளிருந்து பாடல்களாகவும் ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்.

திருமந்திரம் பாடல் #1748

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout