மானிட ராக்கை வடிவு சிவலிங்கமானிட ராக்கை வடிவு சிதம்பரமானிட ராக்கை வடிவு சதாசிவமானிட ராக்கை வடிவு திருக்கூத்தே.
பாடல் 1726 — உரைVerse 1726 — meaning
இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாக இருக்கின்றது. சித் என்னும் சித்தமும், அம் என்னும் ஆகாயமும், அதில் வீற்றிருக்கின்ற பரம் என்னும் பரம்பொருளும் சேர்ந்த சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாக இருக்கின்றது. அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாக இருக்கின்றது. இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாக இருக்கின்றது.
The Siva lingam which is the mark of God is itself the shape of the body of living beings. Chidambaram, which the source reads as chit, the mind, and am, the sky, and param, the supreme being seated there, is itself the thoughts within the body of living beings. The supreme being who is unmoving power is itself the soul within the body of living beings. And the sacred dance that God dances is itself the movements in the body of living beings.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாக இருக்கின்றது.
The Siva lingam which is the mark of God is itself the shape of the body of living beings.
- வரி 2Line 2
சித் என்னும் சித்தமும், அம் என்னும் ஆகாயமும், அதில் வீற்றிருக்கின்ற பரம் என்னும் பரம்பொருளும் சேர்ந்த சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாக இருக்கின்றது.
Chidambaram, which the source reads as chit, the mind, and am, the sky, and param, the supreme being seated there, is itself the thoughts within the body of living beings.
- வரி 3Line 3
அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாக இருக்கின்றது.
The supreme being who is unmoving power is itself the soul within the body of living beings.
- வரி 4Line 4
இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாக இருக்கின்றது.
The sacred dance that God dances is itself the movements in the body of living beings.




