திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1727

ஏழாம் தந்திரம்3. பிண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உலந்தனர் பின்னு முளரென நிற்பர்நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்புலந்தரு பூதங்க ளைந்து மொன்றாகவலந்தரு தேவரை வந்தி செயீரே.

உரை

இந்தப் பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும், இனியும் பிறவி வேண்டும் என்று, இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்குத் தேவையான உடலை, நிலத்தைத் தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசை, அவர்களுக்கு ஏற்ற வடிவமாகச் செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதைச் செய்யுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    இந்தப் பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும், இனியும் பிறவி வேண்டும் என்று, இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள்.

  • வரி 2

    அவர்களுக்குத் தேவையான உடலை, நிலத்தைத் தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசை, அவர்களுக்கு ஏற்ற வடிவமாகச் செய்து கொடுக்கும்.

  • வரி 3

    அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்து கொடுக்கும்.

  • வரி 4

    அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதைச் செய்யுங்கள்.

திருமந்திரம் பாடல் #1727

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout