திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1728

ஏழாம் தந்திரம்3. பிண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கோயில்கொண் டன்றே குடிகொண்ட தைவரும்வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்தாயில்கொண் டாப்போற் றலைவனென் னுள்புகவாயில்கொண் டீசனும் வாழவந் தானே.

உரை

உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றைத் தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்துப் பிறக்கும் போதே, ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று, அந்தப் புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு, அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு, குழந்தை தாயைத் தேடி அழுவது போல இறைவனைத் தேடுகின்றார்களோ, அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடித் தாய் தானாகவே வருவது போல, இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து, அடியவரை ஆட்கொண்டு, அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுவான்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றைத் தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன்.

  • வரி 2

    அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்துப் பிறக்கும் போதே, ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று, அந்தப் புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு, அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர்.

  • வரி 3

    உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு, குழந்தை தாயைத் தேடி அழுவது போல இறைவனைத் தேடுகின்றார்களோ, அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடித் தாய் தானாகவே வருவது போல, இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருப்பான்.

  • வரி 4

    அடியவரை ஆட்கொண்டு, அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுவான்.

திருமந்திரம் பாடல் #1728

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout