தொடர்ந்து படிக்கread this section continuously
கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமுறைவாயில்கொண் டானடி நாடிகள் பத்துளபூசைகொண் டானடி புனைந்தும் புற்கிட்டுவாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.
உரைmeaning
அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே, தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்ட இறைவன், தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்குச் செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டான். தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்து, அந்த உடலைக் கொண்ட அடியவரைத் தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான்.
God has taken for his own, as the temple in which he sits, the very body of living beings, which holds nothing but impurities and is covered over with flesh. By his sacred feet he accepted the working of the ten kinds of nadi within that body as the worship offered to him. By the grace of those same sacred feet he removed every impurity in that body, set it in order and made it clean, and he sits within the body of the devotee who bears it as the great guru who leads that devotee towards himself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே, தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்டான் இறைவன்.
God has taken for his own, as the temple in which he sits, the very body of living beings, which holds nothing but impurities and is covered over with flesh.
- வரி 2Line 2
தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்குச் செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டான்.
By his sacred feet he accepted the working of the ten kinds of nadi within that body as the worship offered to him.
- வரி 3Line 3
தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்தான்.
By the grace of those same sacred feet he removed every impurity in that body, set it in order and made it clean.
- வரி 4Line 4
அந்த உடலைக் கொண்ட அடியவரைத் தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான்.
He sits within the body of the devotee who bears it, as the great guru who leads that devotee towards himself.
திருமந்திரம் பாடல் #1729
1 / 2





