தொடர்ந்து படிக்கread this section continuously
கூடிய பாத மிரண்டும் படிமிசைபாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந்தேடு முகமைந்துஞ் செங்கணின் மூவைந்துநாடுஞ் சதாசிவம் நல்லொளி முத்தே.
உரைmeaning
அனைத்திற்கும் மேலான சிவப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் திருவுருவமானது, அடியவர்களை மேல் நிலைக்குக் கொண்டு செல்லும், இணைந்தே இருக்கின்ற இரண்டு திருவடிகளைக் கொண்டும், பத்துத் திசைகளுக்கும் பரந்து எட்டுகின்ற பத்துத் திருக்கரங்களைக் கொண்டும், ஐந்து திருமுகங்களைக் கொண்டும், அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்களைக் கொண்டும், ஒப்பில்லாத முத்துப் போலப் பிரகாசமான ஒளி வீசும் ஜோதி அம்சமாகவும் இருக்கின்றது. உருவமே இல்லாத இறைவனுக்கு, இப்படி அடியவர்கள் காணக்கூடிய அருவுருவமான வடிவமாக இருப்பதே சதாசிவ இலிங்கம் ஆகும்.
The sacred form of Sadasivamurthy, the supreme Shiva who is above all things, has two sacred feet that stand joined together and carry devotees to a higher state, and ten sacred hands that spread out and reach all ten directions, and five sacred faces, and, three to each of those five faces, fifteen sacred eyes in all, and it is also the aspect of light that shines bright like a pearl without equal. For God who has no form at all, standing in this way as a form with and without shape that devotees can see is what the Sadasiva lingam is.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அனைத்திற்கும் மேலான சிவப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் திருவுருவம், அடியவர்களை மேல் நிலைக்குக் கொண்டு செல்லும் இணைந்தே இருக்கின்ற இரண்டு திருவடிகளைக் கொண்டது.
The sacred form of Sadasivamurthy, the supreme Shiva who is above all things, has two sacred feet that stand joined together and carry devotees to a higher state.
- வரி 2Line 2
பத்துத் திசைகளுக்கும் பரந்து எட்டுகின்ற பத்துத் திருக்கரங்களைக் கொண்டது.
It has ten sacred hands that spread out and reach all ten directions.
- வரி 3Line 3
ஐந்து திருமுகங்களையும், அந்த ஐந்து முகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்களையும் கொண்டது.
It has five sacred faces, and, three to each of those five faces, fifteen sacred eyes in all.
- வரி 4Line 4
ஒப்பில்லாத முத்துப் போலப் பிரகாசமான ஒளி வீசும் ஜோதி அம்சமாகவும் இருக்கின்றது; உருவமே இல்லாத இறைவனுக்கு இப்படி அடியவர்கள் காணக்கூடிய அருவுருவமான வடிவமாக இருப்பதே சதாசிவ இலிங்கம் ஆகும்.
It is also the aspect of light that shines bright like a pearl without equal. For God who has no form at all, standing in this way as a form with and without shape that devotees can see is what the Sadasiva lingam is.
திருமந்திரம் பாடல் #1730
1 / 2





