திருமூலர் அருளிய திருமந்திரம்
2. அண்ட லிங்கம்

ஏழாம் தந்திரம் பாடல் 1712–1725 (14 பாடல்கள்)

இலிங்கம தாகுவ தாரு மறியாரிலிங்கம தாவது எண்டிசை யெல்லாமிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையுமிலிங்கம தாக வெடுத்த துலகே.

உலகி லெடுத்தது சத்தி முதலாயுலகி லெடுத்தது சத்தி வடிவாயுலகி லெடுத்தது சத்தி குணமாயுலகி லெடுத்த சதாசிவன் றானே.

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியுமாகமு மாறாறு தத்துவத் தப்பாலாமேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவமாகம தத்துவா வாற்சிவ மாமே.

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனைவாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்றுகாத்தன னவனின் கருத்தறி யாரே.

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதியொண்சுட ரானவிர வியோ டிந்திரன்கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்தண்சுட ராயெங்குந் தாபர மாமே.

தாபரத் துள்நின் றருளவல் லான்சிவன்மாபரத் துண்மை வழிபடு வாரில்லைமாபரத் துண்மை வழிபடு வாளர்க்குப்பூவகத் துண்ணின்ற பொற்கொடி யாகுமே.

தூய விமானமுந் தூலம தாகுமாலாய சதாசிவ மாகுநற் சூக்குமமாய பெலிபீடம் பத்திர லிங்கமாமாய வரனிலை யாய்ந்துகொள்வார் கட்கே.

முத்துடன் மாணிக்க மொய்த்த பவளமுங்கொத்து மக்கொம்பு சிலைநீறு கோமளமத்தன்றன் னாகம மன்ன மரிசியாமுத்தத்தின் சாதனம் பூமண லிங்கமே.

துன்றுந் தயிர்நெய் பால்தூய மெழுகுடன்கன்றிய செப்புக் கனலிரதஞ் சலம்வன்றிறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன்தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

மறையவ ரற்சனை வண்படி கந்தானிறையவ ரற்சனை யேயபொன் னாகுங்குறைவில் வசீகர கோமள மாகுந்துறையுடைச் சூத்திரர் தொல்வாண் லிங்கமே.

அதுவுணர்ந் தேனொரு தன்மையை நாடியெதுவுணரா வகை நின்றன னீசன்புதுவுணர் வான புவனங்க ளெட்டுமிதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

அகலிட மாயறி யாம லடங்குமுகலிட மாய்நின்ற ஊனதி னுள்ளேபகலிட மாமுன்னம் பாவ வினாசன்புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

போது புனைகழல் பூமிய தாவதுமாது புனைமுடி வானக மாவதுநீதியு ளீசனுடல் விசும்பாய் நிற்குமாதியுற நின்றது அப்பரி சாமே.

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாய்த்திரைபொரு நீரது மஞ்சன மாலைவரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலைகரையற்ற நந்தி கலையுந்திக் காமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1712

1 / 14

0:000:00
2. அண்ட லிங்கம்பாடல் 1712

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com