தொடர்ந்து படிக்கread this section continuously
இலிங்கம தாகுவ தாரு மறியாரிலிங்கம தாவது எண்டிசை யெல்லாமிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையுமிலிங்கம தாக வெடுத்த துலகே.
உரைmeaning
இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டுத் திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும். அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.
No one knows what the lingam is. Everything that stands in the eight directions is the lingam. The sixty-four kalais too are the lingam. And God made all the worlds as that very lingam, which is his own mark.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள்.
No one knows what the lingam is.
- வரி 2Line 2
எட்டுத் திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும்.
Everything that stands in the eight directions is the lingam.
- வரி 3Line 3
அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும்.
The sixty-four kalais too are the lingam.
- வரி 4Line 4
இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.
And God made all the worlds as that very lingam, which is his own mark.
திருமந்திரம் பாடல் #1712
1 / 2





