தொடர்ந்து படிக்கread this section continuously
உலகி லெடுத்தது சத்தி முதலாயுலகி லெடுத்தது சத்தி வடிவாயுலகி லெடுத்தது சத்தி குணமாயுலகி லெடுத்த சதாசிவன் றானே.
உரைmeaning
உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பதும் இலிங்கமாகும். உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பதும் இலிங்கமாகும். உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்துமே, அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.
The lingam is the root cause of the action of everything God has made in the world. The lingam is also the form of the action of everything God has made in the world. The lingam is also the nature of the action of everything God has made in the world. And everything God has made in the world is itself the lingam, the mark of the supreme Shiva who is unmoving power.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும்.
The lingam is the root cause of the action of everything God has made in the world.
- வரி 2Line 2
உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும்.
The lingam is the form of the action of everything God has made in the world.
- வரி 3Line 3
உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும்.
The lingam is the nature of the action of everything God has made in the world.
- வரி 4Line 4
உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.
Everything God has made in the world is itself the lingam, the mark of the supreme Shiva who is unmoving power.
திருமந்திரம் பாடல் #1713
1 / 2





