திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1714

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியுமாகமு மாறாறு தத்துவத் தப்பாலாமேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவமாகம தத்துவா வாற்சிவ மாமே.

உரை

வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு கிடைக்கும் முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் சொல்லப்பட்டபடி) கடந்து இருக்கின்ற, அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்குக் கொடுத்து அருளுகின்ற பரம்பொருளே சதா சிவமாகும். அந்தப் பரம்பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அவற்றை அனுபவித்து முடித்த பிறகு கிடைக்கும் முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும்,

  • வரி 2

    உடலையும் மனதையும் இயக்குகின்ற, ஆறும் ஆறும் பெருக்கி வருகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து இருக்கின்ற

  • வரி 3

    அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும் உயிர்களுக்குக் கொடுத்து அருளுகின்ற பரம்பொருளே சதா சிவம் ஆகும்.

  • வரி 4

    அந்தப் பரம்பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1714

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout