திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1715

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனைவாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்றுகாத்தன னவனின் கருத்தறி யாரே.

உரை

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை, நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி, வாழ்த்தி, கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும், அண்ட சராசரங்களாகவும் இருந்து, அவை எல்லாவற்றையும் கடந்து அதற்கு அப்பாலும் நின்று, அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

வரி வாரியாக

  • வரி 1

    எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனைப் போற்றி வணங்குகின்றார்கள்.

  • வரி 2

    நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் அவனை வாழ்த்துகின்றார்கள்.

  • வரி 3

    கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அவன் அண்ட சராசரங்களாகவும் இருந்து, அவை எல்லாவற்றையும் கடந்து அதற்கு அப்பாலும் நின்று,

  • வரி 4

    அனைத்தையும் காத்து அருளுகின்றான். அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

திருமந்திரம் பாடல் #1715

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout