திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1716

ஏழாம் தந்திரம்2. அண்ட லிங்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதியொண்சுட ரானவிர வியோ டிந்திரன்கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்தண்சுட ராயெங்குந் தாபர மாமே.

உரை

அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே, பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும், ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும், அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும், எங்கும் பரந்து இருக்கின்றான். அவனே இலிங்க வடிவம் ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும் இருக்கின்றான்.

  • வரி 2

    ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும் இருக்கின்றான்.

  • வரி 3

    அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும் இருக்கின்றான்.

  • வரி 4

    குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும் ஆகி எங்கும் பரந்து இருக்கின்றான்; அவனே இலிங்க வடிவம் ஆகும்.

திருமந்திரம் பாடல் #1716

1 / 2

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout