தொடர்ந்து படிக்கread this section continuously
ஆயு மலரி னணிமலர் மேலதுமாய விதழும் பதினாறு மங்குளதூய வறிவு சிவானந்த மாகிப்போய்மேய வறிவாய் விளைந்தது தானே.
உரைmeaning
உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது, ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும். அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றன. இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப்படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும், பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளன. இவற்றைச் சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது, இறைவனது பேரின்பத்தைத் தாங்குகின்ற பாத்திரமாக ஆகிவிடுகின்றது. அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவாக விளைய வைப்பதற்கு, இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன.
What sets the span of years for the worldly life of living beings is the flowers that are the six adhara chakras. The six letters that are worn upon them as an ornament and that set them working stand above those flowers. The petals of the adhara chakras thus set working by the letters, and the sixteen kalais, are all there in that same place. When these are set working through sadhana, the understanding is made pure and becomes a vessel able to hold the great bliss of God. And it is these six adhara chakras that then bring it about that worldly understanding is changed and ripens into the great knowledge of God.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது, ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும்; அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றன.
What sets the span of years for the worldly life of living beings is the flowers that are the six adhara chakras, and the six letters that are worn upon them as an ornament and that set them working stand above those flowers.
- வரி 2Line 2
இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப்படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும், பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளன.
The petals of the adhara chakras thus set working by the letters, and the sixteen kalais, are all there in that same place.
- வரி 3Line 3
இவற்றைச் சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது, இறைவனது பேரின்பத்தைத் தாங்குகின்ற பாத்திரமாக ஆகிவிடுகின்றது.
When these are set working through sadhana, the understanding is made pure and becomes a vessel able to hold the great bliss of God.
- வரி 4Line 4
அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவாக விளைய வைப்பதற்கு, இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன.
And it is these six adhara chakras that then bring it about that worldly understanding is changed and ripens into the great knowledge of God.
திருமந்திரம் பாடல் #1711
1 / 2





